வடிவேலுக்கு அடுத்து ஆணவத்தில் ஆடி, ரெட் கார்ட் வாங்க போகும் 5 நடிகர்கள்!! தயாரிப்பாளர் சங்கம்
சினிமாவை பொறுத்தவரை ஒரு படத்தில் நடிகர் நடிகைகள் கமிட்டாகினால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படாத வண்ணம் படத்தினை முடித்து கொடுக்க வேண்டும்.
ஆனால் அப்படி சில நடிகர் நடிகைகள் ஆணவத்தில் தான் தான் பெரியவன் என்று நினைத்து முறையாக ஷூட்டிங்கிற்கு வராமல் ஷூட்டிங்கில் எல்லைமீறியபடி நடந்து கொள்வது போன்ற தேவையற்ற செயலில் ஈடுபட்டு தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துவார்கள்
. அப்படி சமீபத்தில் வடிவேலு ரெட் கார்ட் போடப்பட்டு சினிமாவில் இருந்து 4 ஆண்டுகள் ஒதுக்கி வைக்கப்பட்டார். தற்போது அவரை போல் ரெட் கார்ட்டில் சிக்கியுள்ளார்கள் முன்னணி டாப் நடிகர்கள்.
திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு முறையான ஒத்துழைப்பு கொடுக்காததால் விஷால், எஸ் ஜே சூர்யா, சிம்பு, யோகி, அதர்வா போன்ற நடிகர்களிடம் விளக்கத்தை கேட்டு தமிழ் திரைப்பட துறை தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளது.
அவர்கள் அனைவரும் முறையாக விளக்கம் அளிக்கவில்லை என்றால் ரெட் கார்டு விதிக்கவும் தயாரிப்பாளர் சங்கத்தினர் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.