கன்னட ரசிகர்களை சூப்பர் ஸ்டாரை வைத்து வம்பிழுக்கும் நெல்சன்! தலைவர் 169க்கு வந்த பிரச்சனை?

Rajinikanth Nelson Dilipkumar
By Edward May 09, 2022 07:10 AM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அண்ணாத்த படத்திற்கு பிறகு யார் இயக்கத்தில் நடிப்பார் என்ற கேள்வி எழுந்தது. அதற்காக பல இயக்குனர்களுடன் கதையை கேட்ட சூப்பர் ஸ்டார் கடைசியில் நெல்சனை தேர்வு செய்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அனிருத் இசையில் சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

பீஸ்ட் படத்தினை பார்த்த சூப்பர் ஸ்டார் பின் வாங்கினாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் நெல்சன் இயக்கத்தில் நடித்தே தீருவேன் என்ற வைராக்கியத்தில் இருந்து வருகிறார்கள். அப்படத்தின் வேலைகள் மும்முரமாக நெல்சன் வேலைகளை ஆரம்பித்துள்ளது.

ஐஸ்வர்யா ராய் கதாநாயகியாகவும் நடிகை ரம்யா கிருஷ்ணனும் நடிக்கவுள்ளார் என்ற செய்திகள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் கன்னட சூப்பர் ஸ்டார் நடிகரான சிவ ராஜ்குமார் தலைவர் 169 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

சமீபத்தில் கன்னட நடிகரும் அவரது தமியுமான புனித்ராஜ்குமார் மறைந்த சோகத்தில் இருந்து வெளியில் கொஞ்சகொஞ்சமாக வந்துள்ளார் சிவ ராஜ் குமார். தற்போது படங்களில் நடிக்க ஆரம்பிக்கையில் சூப்பர் ஸ்டார் படத்தில் நடிக்கவும் ஒப்புக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அதேசமயம் ரஜினியின் பிறந்த ஊரான கர்நாடகத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அதிக வரவேற்பு இருக்கும் நிலையில் அவருக்கே, கன்னட சூப்பர் ஸ்டாரான சிவக்குமார் வில்லனாக நடிக்கப் போவது அங்கே பாதி ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படத்தில் வில்லனாக நடிக்கும் செய்தியால் கன்னட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்களாம். இதனால் கடைசியில் வில்லனாக வேறு யாரை நடிக்க வைக்கலாம் என்ற சிக்கலில் நெல்சன் இருந்து வருகிறாராம்.