3400 கோடி ரூபாய் சொத்து!! ஏழைகளுக்கு கொடுத்த பிரபல நடிகர் ஜாக்கி சான்..
ஜாக்கி சான்
90ஸ் கிட்ஸ்களின் நாயகனாக திகழ்ந்து வந்தவர் ஜாக்கி சான். ஆக்ஷன் ஸ்டண்ட்ஸ் என்ற பேச்சை எடுத்தாலே அதில் நம்பர் 1 இடத்தில் இருப்பவர் ஜாக்கி சான்.
தி லெஜெண்ட் ஆப் டிரங்கன் மாஸ்டர், போலீஸ் ஸ்டோரி உள்ளிட்ட பல படங்களில் நடித்து கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்துள்ளார். விரைவில் ஜாக்கி சான் நடிப்பில் உருவாகியுள்ள கராத்தே கிட்ஸ் 2 படம் ரிலீஸாகவுள்ளது.
ரூ. 3400 கோடி
இந்நிலையில் ஜாக்கி சான் மிகப்பெரிய ஒரு சம்பவத்தை செய்துள்ளார். அதாவது, தன்னுடைய ரூ. 3400 கோடி மதிப்பிலான சொத்த ஏழை மக்களின் படிப்பிற்காகவும், இயற்கை பேரிடர்களுக்கும் ஜாக்கி சான் Charitable Foundation மூலம் நன்கொடையாக கொடுத்துள்ளார்.
நான் சிறுவயதில் ஏழ்மையில் தவித்து இருக்கிறேன். அவர்களுடைய கஷ்டம் எனக்கு நன்றாக தெரியும். உதவி செய்யும் போது அவர்கள் படும் சந்தோஷம், என்னையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது என்று ஜாக்கி சான் கூறியிருக்கிறார். இவரின் இந்த செயல் உலக ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.