ரெய்னாவுக்கு நடந்த இதே நிலை! ஜடேஜா சிஎஸ்கேவில் இருந்து விலக இதுதான் காரணமா!!!

MS Dhoni Ravindra Jadeja Chennai Super Kings IPL 2022 Suresh Raina
By Edward 10 மாதங்கள் முன்
Edward

Edward

Report

நடப்பு ஐபிஎல் போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. ஏற்கனவே குஜராத் அணி பிளே ஆஃப் போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில், அதன் அடுத்திருக்கும் 3 இடங்களுக்காக பல அணிகள் போட்டிப்போட்டு வருகிறது.

இதுவரை நடந்த போட்டிகளில் மூன்று போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்ற மும்பை அணி பிளே அஃப் சுற்றினை இழந்தது. இன்னொரு பக்கம் மதில்மேல் பூனையாக சென்னை சூப்பர் சிங்கர் அணி இருந்து வந்த நிலையில் நேற்றைய ஆட்டத்தில் மும்பையுடன் படுதோல்வியடைந்தது.

இதன்மூலம் மும்பையை தொடர்ந்து சென்னை அணியும் பிளே ஆஃப் வாய்ப்பினை இழந்தது. இந்நிலையில், இதற்கு காரணம் ஜடேஜாவின் ஆரம்பகட்ட போட்டிகளின் தோல்விகள் தான் காரணம் என்று கூறப்பட்டு வந்தது.

தற்போது ஜடேஜா ஐபிஎல் 15 வது சீசனில் இருந்து விலகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. காயம் காரணமாக கடந்த போட்டியில் ஆடமுடியாத ஜடேஜா சிஎஸ்கே அணியில் ஏற்பட்ட சில மனக்கசப்பு காரணமாக தூக்கப்பட்டாரா என்று செய்திகளும் வைரலாகி வருகிறது.

மேலும் அடுத்த ஐபிஎல்லில் ஜடேஜாவை சென்னை அணி ஒதுக்கி விடுகிறதா என்ற ஐய்யமும் எழுந்துள்ளது. இதற்கு சென்னை அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஷ்வநாதன் ஜடேஜா காயம் காரணமாக மட்டுமே அணியில் இருந்து விலகி இருக்கிறார்.

மருத்துவர்களின் அறிவுரைப்படி தான் அவர் விலகி இருக்கிறார் என்றும் வருங்காலங்களில் சென்னையில் தொடர்வார் என்றும் விளக்கம் அளித்துள்ளார். மேலும் சென்னை அணியில் நேற்று ஜடேஜா இல்லாதது வருத்தமளிக்கிறது என்று தோனி கூறியதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் இதேபோல் தான் ரெய்னாவும் கடந்த ஆண்டுகளில் ஒருசில போட்டிகளில் இருந்து சென்னையில் இருந்து விலக்கப்பட்டு பின் அணியில் இருந்தே தூக்கி வீசினார்கள் என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.