வசூல் வேட்டையில் ரஜினிகாந்த்.. ஜெயிலர் 2 பாக்ஸ் ஆபிஸ்
Jailer 2 Box office: ஜெயிலர் 2 திரைப்படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ரஜினியின் பாக்ஸ் ஆபிஸ் வேட்டை தொடரும் நிலையில், 12 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது ஜெயிலர் 2 என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.
ஜெயிலர் 2
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் - நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகி வெளியான ஜெயிலர் கடந்த 2023-ல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து ஜெயிலர் 2 மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பால் இண்டஸ்ட்ரி ஹிட்டாகியுள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்
ஜெயிலர் 2 திரைப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். அதுவும் எப்போது ரூ. 1000 கோடியை தொடும் என்பதை பெரும்பான்மையான ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்த நிலையில், ஜெயிலர் 2 உலகளவில் 12 நாட்களில் ரூ. 725 கோடி வசூல் செய்துள்ளது.
