ஜெயிலர் 2 உலகளவில் செய்துள்ள வசூல்.. விவரம் இதோ
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வரும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி 18 நாட்களைக் கடந்துள்ள ஜெயிலர் 2 திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதைப்பற்றிய முழு விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி கடந்த மாதம் திரைக்கு வந்தது ஜெயிலர் 2. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா, வித்யா பாலன், ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், சுராஜ், நமோ நாராயணன், மோகன்லால் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைக்க, முதல் நாளிலிருந்தே வசூலில் பல சாதனைகளை படைத்தது. மேலும் 10 நாட்களில் ரூ. 700 கோடிக்கும் மேல் வசூல் செய்து 2 தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் திரைப்படமாக மாறியுள்ளது.
இந்நிலையில், ஜெயிலர் 2 திரைப்படம் உலகளவில் 18 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 18 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 800 கோடி வசூல் செய்துள்ளது. இந்நேரம் ரூ. 1000 கோடி வசூல் செய்யும் திறன்கொண்ட இப்படம் சில காரணங்களால் இதுவரை ரூ. 800 கோடியை மட்டுமே தொட்டுள்ளது. விரைவில் தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த ரூ. 1000 கோடி என்ற இலக்கை ஜெயிலர் 2 எட்டுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.