வாய்ப்புக்காக மகள், அம்மாவை படுக்கையைக்கு அழைப்பு!.. ஜெயிலர் வில்லன் விநாயகன் மீது புகார்
மலையாள படங்களில் காமெடியன், வில்லன் எனப் பல ரோலில் நடித்து வந்த விநாயகன், தமிழில் விஷால் நடிப்பில் வெளிவந்த திமிரு படத்தில் ஸ்ரேயா ரெட்டிக்கு அடியாளாக நடித்திருந்தார்.
இப்படத்தை தொடர்ந்து சிலம்பாட்டம் மற்றும் காளை, சிறுத்தை போன்ற திரைப்படங்களில் நடித்தார். சமீபத்தில் வெளிவந்த ரஜினியின் ஜெயிலர் படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்து தற்போது சென்சேஷனல் நடிகராக வலம் வருகிறார்.
சினிமா வாழ்க்கை தாண்டி பல சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார் விநாயகன். மாடல் அழகி மிருதுளாதேவி என்பவர் விநாயகன் மீது பரபரப்பு குற்றம்சாட்டினார்.
அதில் , என்னையும் அம்மாவையும் விநாயகன் படுக்கைக்கு அழைத்தார். பாலியல் ரீதியாக சொந்தரவு செய்கிறார் என்று புகார் அளித்திருந்தார்.
இதையடுத்து காவல்துறை விசாரணையில், விநாயகன் நடிகையையும் அவரது அம்மாவையும் படுக்கைக்கு அழைத்ததை ஒத்துக்கொண்டார்.
இந்த சம்பவம் சில வருடங்களுக்கு முன்பு நடித்திருந்தாலும் நெட்டிசன்களால் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.