விஜய் 20,000 கோடி சம்பாதிக்கலாம்..ஏமாற்றுக்காரர், பித்தலாட்டக்காரர்!! காட்டமாக பேசிய ஜேம்ஸ் வசந்தன்...

Vijay James Vasanthan Gossip Today Thamizhaga Vetri Kazhagam
By Edward Apr 09, 2026 08:15 AM GMT
Report

நடிகரும் தவெக தலைவருமாக விஜய்யின் அரசியல் பரப்புரை குறித்து பலரும் விமர்சித்து பேசி வருகிறார்கள். அந்தவகையில் இசையமைப்பாளரும் விமர்சகருமான ஜேம்ஸ் வசந்தன் விஜய் குறித்து கூறிய கருத்து பலரது கவனத்தையும்ம் ஈர்த்துள்ளது.

விஜய் 20,000 கோடி சம்பாதிக்கலாம்..ஏமாற்றுக்காரர், பித்தலாட்டக்காரர்!! காட்டமாக பேசிய ஜேம்ஸ் வசந்தன்... | James Vasanthan Slams Vijay Political Plan Behind

ஜேம்ஸ் வசந்தன்

நடிகர் விஜய் ஏதோ மக்கள் சேவைக்காக வரவில்லை என்றும் அவர் சுமார் ரூ. 20 ஆயிரம் கோடிக்கு ஆசைப்பட்டுத்தான் அரசியலுக்கு வந்துள்ளார் என்றும் கூறியிருக்கிறார்.

விஜய் ஒன்றும் தூய்மையானவர் இல்லை, சினிமாவில் கிடைக்கும் பெரிய வருமானத்தை விட்டுவிட்டு அரசியலுக்கு வருவது சும்மா சேவை மனப்பான்மை காரணமாக இல்லை, இங்கிருக்கும் வாய்ப்புகளை பார்த்துதான் வருகிறார்.

அவருக்கு பின் இருக்கிறவர்கள் யார் யார் ஆலோசனை கொடுக்கிறார்கள் என்று கவனிக்க வேண்டும். எல்லாமே திட்டமிட்ட நடைமுறையில் தான் நடக்கிறது. இதை அவரை பின்தொடர்பவர்களில் சில நம்பமாட்டார்கள். சிலருக்கும் புரியாது, ஆனால் உண்மை தெரிந்தவர்களுக்கு இது தெளிவாக தெரியும்.

ஏமாற்றுக்காரர்

விஜய்யை பார்த்து நாமும் இப்படி சம்பாதிக்கலாம் என்று நம்பி சொந்தமாக இருந்த நிலம், வீடு எல்லாத்தையும் விற்று தேர்தலில் நிற்கும் சிலர், முடிவில் பெரிய நஷ்டத்தை சந்திப்பார்கள். அதில் சிலர் தவறான முடிவுகளையும் எடுக்கலாம், இது நடக்கவில்லை என்றால் தேர்தலுக்கு பின் என்னிடம் கேளுங்கள்.

விஜய் 20,000 கோடி சம்பாதிக்கலாம்..ஏமாற்றுக்காரர், பித்தலாட்டக்காரர்!! காட்டமாக பேசிய ஜேம்ஸ் வசந்தன்... | James Vasanthan Slams Vijay Political Plan Behind

ஒருவரின் கண்களையும் உடல் மொழியையும் பார்த்தாலே அவர் எப்படி இருப்பார் என்பதை உணரமுடியும். அந்தவகையில் விஜய்யை பார்த்தால், அவர் ஒரு ஏமாற்றுக்காரர், பித்தலாட்டக்காரர் என்று எனக்கு தோன்றுகிறது. அதனால் தான் நான் இவ்வளவு வெளிப்படையாக பேசுகிறேன் என்று ஜேம்ஸ் வசந்தன் விமர்சித்திருக்கிறார்.