பகவந்த் கேசரி ரீமேக்னு சொல்பவர்களுக்கு ஜனநாயகன் பதிலடி அடிக்கும்..ஏன் தெரியுமா...

Vijay Vijayan Gossip Today H. Vinoth JanaNayagan
By Edward Jan 04, 2026 09:31 AM GMT
Report

ஜனநாயகன்

ஜனநாயகன் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் படம். இதற்கு முக்கிய காரணம் விஜய்யின் கடைசி படம் என்பதால் தான். விஜய் இந்த படத்தை தொடர்ந்து தீவிர அரசியலில் களம் காண உள்ளார்.

இதனால் தெள்ள தெளிவாக இது தான் என் கட்சியின் படம் என இசை வெளியீட்டு விழாவிலும் சொல்லி விட்டார்.

பகவந்த் கேசரி ரீமேக்னு சொல்பவர்களுக்கு ஜனநாயகன் பதிலடி அடிக்கும்..ஏன் தெரியுமா... | Jana Nayagan Confirms Bhagavanth Kesari Remake

பகவந்த் கேசரி ரீமேக்

இந்நிலையில் நேற்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த ஜனநாயகன் ட்ரைலர் ஜனவரி 3 ஆம் தேதி வெளியாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்திருந்தது. ஜனநாயகன் படத்தின் டிரைலர் அப்படியே பகவந்த் கேசரி படத்தின் கதையை போல் இருக்கிறது என்று பலரும் கூறு வருகிறார்கள்.

தெலுங்கில் அப்படம் ஹிட்டானது, இருந்தாலும் ரசிகர்கள் பயன்ப்படுவதற்கு காரணம், அப்படத்தை அப்படியே தமிழுக்கு வினோத் மாற்றியிருப்பாரோ என்பதை நினைத்து ரசிகர்கள் இயக்குநர் மேல் கொந்தளிப்பில் இறங்கினார். ஆனால், பிங்க் படத்தை அஜித்தை வைத்து வினோத் இயக்கிய நேர் கொண்ட பார்வை படத்தை அப்படியே வேறுமாதிரி, அதுவும் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றபடி மாற்றினார்.

பகவந்த் கேசரி ரீமேக்னு சொல்பவர்களுக்கு ஜனநாயகன் பதிலடி அடிக்கும்..ஏன் தெரியுமா... | Jana Nayagan Confirms Bhagavanth Kesari Remake

அதேபோல் தான் விஜய்க்கு ஏற்றபடி இப்படத்தின் அரசியல் டயலாக்கையும், விஜய்க்கே உரித்தான ஸ்டைல் மற்றும் மாஸான சண்டைகளை வைத்திருக்கிறார் வினோத். விஜய் என்ற ஒரு நடிகர் அவ்வளவு எளிதாக தனது கடைசி படத்தை விட்டுக்கொடுத்துவிட மாட்டார்.ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ், டயலாக் டெலிவரி, ஆக்‌ஷன்கள் எல்லாம் பாலைய்யாவைவிட சிறப்பாக இருக்க வேண்டும் என்று விஜய் சொல்லியிருப்பார்.

பகவந்த் கேசரி படத்தில் எக்கச்சக்க ஆக்ஷன் காட்சிகள் இருந்தாலும் பாலகிருஷ்ணா செய்தது காமெடியாக பலரும் பார்த்தனர். அப்படியே விஜய் அதை செய்யமாட்டார். நிச்சயமாக வினோத்தும் விஜய்யு சேர்ந்து பொங்கலுக்கு பந்தயம் அடிப்பார்கள். விஜய் ரசிகர்களுக்கு மறக்கமுடியாத ஒரு அனுபவமாக ஜனநாயகன் படம் இருக்கும் என்று பலரும் கூறி வருகிறார்கள்.