ஜனநாயகன் இல்ல, ஜவ்வு நாயகன்!! விஜய்யை படுமோசமான கலாய்த்த சாட்டை துரைமுருகன்..

Vijay Gossip Today H. Vinoth Mamitha Baiju JanaNayagan
By Jai Jul 24, 2026 06:15 AM GMT
Report

ஜனநாயகன்

தமிழக முதல்வரும் நடிகருமான விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படம் நேற்று ஜூலை 23 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழகத்தில் மட்டும் ஒருநாளில் 9 கோடிக்கும் மேல் வசூலித்து வருகிறது. படத்தை பார்த்த பலரும் தங்கள் கருத்துக்களை இணையதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

ஜனநாயகன் இல்ல, ஜவ்வு நாயகன்!! விஜய்யை படுமோசமான கலாய்த்த சாட்டை துரைமுருகன்.. | Jana Nayagan Is Not Javvu Nayagan Story Saattai

அந்தவகையில் ஜனநாயகன் படம் எப்படி இருக்கிறது என்று சாட்டை துரைமுருகன் தன் கருத்தை பகிர்ந்துள்ளார்.

அதில், ஜனநாயகன் படத்தின் கதை என்னென்ன 50 லட்சம் பொம்மையை தமிழ்நாட்டுக்குள் வில்லன் அனுப்பி வைக்கிறார். அந்த 50 லட்சம் பொம்மைகளும் 50 லட்சம் துப்பாக்கி இருக்கிறது. அதை பார்த்ததும் நாயகி மமிதாவிற்கு பயம் வருகிறது.

ஜனநாயகன் இல்ல, ஜவ்வு நாயகன்!! விஜய்யை படுமோசமான கலாய்த்த சாட்டை துரைமுருகன்.. | Jana Nayagan Is Not Javvu Nayagan Story Saattai

அதற்கு காரணம், மமீதா சின்ன பொண்ணாக இருக்கும்போது ஒரு பொம்மைக்குள் துப்பாக்கி இருப்பதை பார்க்கிறாங்க, அதே துப்பாக்கியால் தான் அம்மா இறந்து போறாங்க. அதனால் அம்மா சாவுக்கு காரமான துப்பாக்கியை பார்த்ததும் மமிதாவிற்கு பயம் வந்துவிடுகிறது. அந்த பயத்தை யார் போக்குவாங்க? என்ற கேள்வி தான் எல்லாருக்கும் வருகிறது.

 ஜவ்வு நாயகன்

துப்பாக்கி கலாச்சாரத்தால் இந்து, முஸ்லீம் பிரச்சனை ஏற்பட, அதனால் மக்கள் யாரு வந்து இந்த பிரச்சனையை சரி பண்ணுவாங்க என்று காத்திருக்க அந்த நேரத்துல் விஜய் அங்கே வருகிறார். ராவணன் மகன்டா என்ற பாட்டை போட, அதை பார்க்கும்போது நமக்கு அழுதுகிட்டே பாடுற மாதிரிதான் தோணும். காரணம் ஜனநாயகன் இல்ல, ஜவ்வு நாயகனாகத்தான் இருக்கிறது.

ஜனநாயகன் இல்ல, ஜவ்வு நாயகன்!! விஜய்யை படுமோசமான கலாய்த்த சாட்டை துரைமுருகன்.. | Jana Nayagan Is Not Javvu Nayagan Story Saattai

எல்லா இடத்திலும் ரத்தம் தெரிக்குது, தல துண்டா போகுது, கை துண்டா பறக்குது, இதையெல்லாம் பார்க்கும்போது நம்ம மனசும் தான் துண்டா போகுது. என்ன விடுங்கடா வெளியே போயிடலாம்னு நெனச்சா, வெளியே வர முடியாது. அதனாலதான் 3 மணி நேரம் அத அறுவையை இருந்து பார்க்க வேண்டிய சூழ்நிலை என்று கூறியிருக்கிறார் சாட்டை துரைமுருகன்.