தனுஷ் வேண்டவே வேண்டாமாம் அந்த நடிகர் ஓகே-வாம்!! ஷாக் கொடுத்த நடிகை ஜான்வி கபூர்..
தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி இந்தியா முழுவதிலும் இருக்கும் பல மொழிகளில் கொடிக்கட்டி பறந்த நடிகை ஸ்ரீதேவி. சில ஆண்டுகளுக்கு முன் மர்மமுறையில் மரணமடைந்தார்.
அவர் இறந்த அடுத்த ஆண்டே அவரது மூத்த மகள் ஜான்வி கபூர் தடக் என்ற படத்தில் அறிமுகமாகி நடித்து வருகிறார். பல படங்களில் நடித்து வரும் ஜான்வி சமீபத்தில் நடிகர் தனுஷுடன் நடிக்க கேட்டிருந்தார்கள்.
ஆனால், ஜான்வி கபூரின் தந்தையும் ஜான்வியும் முடியவே முடியாது என்று கூறிவிட்டார்களாம்.
இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நானும் ரவுடி தான் படத்தினை 100 முறை பார்த்திருக்கிறேன்.
நடிக்க வேண்டும் என்றால் விஜய் சேதுபதியுடன் நடிப்பேன் என்றும் சார் உங்களிடம் நான் நடிக்க வேண்டும் என்று நினைத்தால் உங்கள் படத்தின் ஆடிஷனில் நான் கலந்து கொள்வேன் என்று வாய்ப்பும் கேட்டிருக்கிறார் ஜான்வி கபூர். தற்போது இந்த விசயம் கோலிவுட் வட்டாரத்தில் பெரியளவில் பேசப்பட்டு வருகிறது.