வாக்குகள் தான் இதுபோன்ற முடிவுகளுக்கு காரணம்!! ஜனநாயகன் நடிகர் ஜேசன் ஓபன் டாக்..

Vijay Actors Bollywood H. Vinoth JanaNayagan
By Edward Jan 14, 2026 09:30 AM GMT
Report

ஜனநாயகன்

இயக்குநர் எச் வினோத் இயக்கத்தில் இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவாகியுள்ள படம்தான் ஜனநாயகன். நடிகர் விஜய்யின் கடைசி படம் என்பதால் மிக விமரிசையாக அவருக்கு மலேசியாவில் தளபதி திருவிழா கொண்டாடினார்கள்.

இதனையடுத்து படம் ஜனவரி 9 ஆம் தேதி ரிலீஸாகவிருந்த நிலையில், படத்தின் தணிக்கை சான்றிதழ் பிரச்சனையில் சிக்கி ஜனநாயகன் படம் ரிலீஸ் தள்ளிப்போனது. மேலும் படத்தின் வழக்கை விசாரித்த பிடி ஆஷா, மறு ஆய்வுக்கு தடை விதித்தது.

வாக்குகள் தான் இதுபோன்ற முடிவுகளுக்கு காரணம்!! ஜனநாயகன் நடிகர் ஜேசன் ஓபன் டாக்.. | Jason Shah His View On Vijay Jananayagan Censor

உடனே தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்ய, அந்த மனுவை தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா, அருள் முருகன் அடங்கிய அமர்வில் தனி நீதிபதி ஆஷாவின் உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்ததுப்பின் ஜனநாயகன் குழு உச்ச நீதிமன்றத்தை அணுகியது.

அதை பார்த்த தணிக்கை வாரியம், தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் எந்த முடிவுக்கும் வர வேண்டாம் என்று உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்தனர்.

நடிகர் ஜேசன் ஷா

இந்நிலையில், ஜனநாயகன் படத்தில் நடித்துள்ள நடிகர் ஜேசன் ஷா அளித்த பேட்டியொன்றில், ஜனவரி 9 ஆம் தேதி ஜனநாயகன் வருகிரது என்று சந்தோஷமாக இருந்தேன். சென்சார் சான்றிதழ் விஷயத்தில் நடக்கும் அனைத்தும் எனக்கு சரியாக தெரியாது.

வாக்குகள் தான் இதுபோன்ற முடிவுகளுக்கு காரணம்!! ஜனநாயகன் நடிகர் ஜேசன் ஓபன் டாக்.. | Jason Shah His View On Vijay Jananayagan Censor

சான்று வழங்கும்முறை எனக்கு முழுவதுமாக புரியவில்லை. அது என் துறையும் கிடையாது, ஆனால் மதம், அரசியலுக்கு படங்களுடன் தொடர்பு இருக்கிறது.

ஆளும் கட்சியாக, ஆக வேண்டும் என்று யாருக்கு ஓட்டு போடுகிறோமோ அடுத்து என்ன நடக்கும் என்பதை தீர்மானிக்கும் பொறுப்பு அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. உங்களின் வாக்குகள் தான் இதுபோன்ற முடிவுகளுக்கு காரணம்.

பேச்சு சுதந்திரம், தொழில்நுட்பத்துடன் சேரும்போது டெட்லி காம்போவாகிறது. ஒரு நடிகர் என்பது பொது ஆள். மக்களின் விமர்சனங்களை எதிர்கொள்ளத்தான் வேண்டும். அது பிடிக்காவிட்டால் நடிகராகக்கூடாது.

பல நடிகர்கள் பணம், புகழ் உள்ளிட்ட நல்ல விஷயங்களை பார்க்கிறார்கள், ஆனால் தலை முதல் கால் வரை வரும் விமர்சனங்களையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். மக்கள் காசு கொடுத்து படம் பார்ப்பதால் மனதில் பட்டதை சொல்வார்கள் என்று கூறியிருக்கிறார் ஜேசன் ஷா.