இன்னும் திருந்தாத அட்லீ!! ஜவான் படத்திலும் காப்பி அடிக்கும் வேலையை காட்டிட்டாரு

Nayanthara Shah Rukh Khan Atlee Kumar Jawan
By Edward Jul 10, 2023 07:15 AM GMT
Report

இயக்குனர் சங்கரிடம் பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி அதன்பின் ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியவர் அட்லீ குமார்.

ஆர்யா, நயன் தாரா, ஜெய், நஸ்ரியா, சந்தானம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களை வைத்து எடுத்த முதல் படமே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அப்படத்தினை அடுத்து நடிகர் விஜய்யின் தெறி, மெசல், பிகில் போன்ற ஹார்ட்ரிக் பிளாக் பஸ்டர் படங்களை கொடுத்தார் அட்லீ.

ஆனால் காப்பி இயக்குனர் என்று பெயரை எடுத்த அட்லீக்கு தமிழில் முன்னணி நடிகர்கள் வாய்ப்பு கொடுக்காமல் இருந்து வந்தனர். இதனால் விரக்தியில் பாலிவுட் பக்கம் சென்ற அட்லீ, 2019 ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தினை இயக்க வாய்ப்பு கிடைத்தது.

இன்னும் திருந்தாத அட்லீ!! ஜவான் படத்திலும் காப்பி அடிக்கும் வேலையை காட்டிட்டாரு | Jawan Atlee Shah Rukh Khan Trailer Trolls Copycat

சுமார் 3 ஆண்டுகளாக ஜவான் படம் சில தடைகளை சந்தித்து வந்த நிலையில் செப்டம்பர் 7 ஆம் தேதி திரையில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் ஜவான் படத்தின் Prevue வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.

ஆக்ஷன் காட்சிகளாக வெளியான அந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் மிரண்டு கருத்துக்களை கூறி வருகிறார்கள். ஆனால் பாராட்டை பெற்றாலும் எப்போது போலும் அட்லீ காப்பி அடிக்கிறார் என்ற விமர்சனத்தையும் பெற்றுள்ளார்.

சில கதாபாத்திரம் மற்றும் காட்சியில் மற்ற படத்தினை வைத்து அட்லீ அட்டர் காப்பி அடித்துள்ளதை இணையத்தில் புகைப்படங்கள் மூலம் கலாய்த்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

GalleryGalleryGalleryGallery