முகத்தை சுழித்து தேசிய கொடியை அவமதித்த அமித்ஷா மகன்.. வைரலாகும் வீடியோ...

Amit Shah Indian Cricket Team
By Edward Aug 29, 2022 09:40 AM GMT
Report

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த வாரம் ஆரம்பமானது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த இந்தியா-பாகிஸ்தான் போட்டி நேற்று துபாயில் நடைபெற்றது. போட்டியில் சிறப்பாக ஆடிய இந்திய அணி வீர ஹார்திக் பாண்டியா வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தார்.

இந்தியா வெற்றி பெற்ற நிலையில் அனைவரும் இந்திய தேசிய கொடியை கையில் ஏந்தி கொண்டாடினர். அப்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் செயலாளர் ஜெய்ஷா கைத்தட்டி உற்சாகத்தில் இருந்தார். அப்போது அவரிடம் ஒருவர் தேசிய கொடியை கொடுத்துள்ளார்.

ஆனால் ஜெய்ஷா கொடியை வாங்க மறுத்து அவமதித்துள்ளார். அவரின் இந்த செயலானது இந்தியா முழுவதும் கண்டனங்களை தெரிவித்து வருகிறது. ஏன் இப்படி அவர் செய்யனும் என்று வீடியோவை பகிர்ந்து வைரலாக்கி வருகிறார்கள் நெட்டிசன்கள்.