சில்க் ஸ்மிதா வீட்டில் ஒரு இரவை கழித்து மனைவியை பார்க்கவே கூச்சப்பட்ட இயக்குனர்!! உண்மையை கூறிய மனைவி
தென்னிந்திய சினிமாவில் 80, 90களில் கவர்ச்சி கன்னியாகவும் காந்தக்கன்னியாக பலரை தன் கட்டுப்பாட்டில் வைத்த நடிகையாக திகழ்ந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. 1996ல் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டது தற்போது வரை பெரிய விசயமாக பேசப்பட்டு வருகிறது. அவர் பல நட்சத்திரங்களுடன் தொடர்பில் இருந்ததாகவும் செய்திகள் வெளியாகியது.

அப்படி தன் கணவர் ஒரு இரவு சில்க் ஸ்மிதா வீட்டில் இருந்ததை குறித்து ஒளிப்பதிவாளர் வேலு பிரபாகரனின் மனைவியும் 10க்கும் மேற்பட்ட படத்தினை இயக்கிய இயக்குனருமான பி ஜெயாதேவி சமீபத்திய பேட்டியொன்றில் கூறியுள்ளார்.
தனது கணவர் தனக்கு செய்த துரோகம் குறித்து பேசிய ஜெயாதேவி, தன்னை காதலித்து திருமணம் செய்து கொண்ட வேலு பிரபாகரன், சில்க் ஸ்மிதா நடித்த பிக்பாக்கெட் என்ற படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். அப்போது சில்க் ஸ்மிதாவுடன் நெருக்கம் ஏற்பட்டது.

அப்படி ஒரு முறை சில்க் ஸ்மிதா வீட்டிற்கு சென்று அவருடம் பேசியதில் நேரம் போனதே தெரியவில்லையாம். நள்ளிரவு ஆன போது சாப்பிட ஏதாவது இருக்கிறதா என்று சில்க் ஸ்மிதாவிடம் கேட்டு உப்மாவும் சாப்பிட்டு இருக்கிறார். சினிமாவே தன் கையில் இருக்கும், சில்க் ஸ்மிதாவுடன் இருப்பது கடவுள் ஆசீர்வாதம் கிடைத்தது போல் உணர்ந்ததாக ஒரு பேட்டியில் இதை வேலு பிரபாகரன் கூறியதாக ஜெயாதேவி கூறியுள்ளார்.

மேலும் அந்த நாள் புனிதமான இரவாக நினைத்த அவர் அடுத்த நாள் என்னை பார்க்க கூச்சமாக இருந்ததாகவும் அப்பேட்டியில் கூறியதாக ஜெயாதேவி கூறியிருக்கிறார். அது பெரியளவில் தன்னை பாதித்ததாக மன வேதனையுடன் அந்த சம்பவத்தை கூறியிருக்கிறார் ஜெயாதேவி.
கடந்த 2009ல் தான் இயக்கி நடித்த காதல் கதை படத்தில் நடித்த நடிகை ஷிர்லே தாஸை வேலு பிரபாகரன் 60 வயதில் திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
You May Like This