ஜெயலலிதா பெயரை கேட்டு பதறி நடுங்கிப்போன காமெடி நடிகர்!! வைகைக்கே இந்த நிலைமையா!!
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் வடிவேலு சில வருடங்களுக்கு முன் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு சினிமாவில் இருந்து விலக்கப்பட்டார். அதன்பின் தற்போது தான் அந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு மீண்டும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்து ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார். ரெட் கார்ட்-க்கு முன் அதாவது மறைந்த அம்மையார் ஜெயலலிதா அவர்களின் இறப்புக்கு முன் வடிவேலு ஜெயலலிதா பெயரை கேட்டு அதிர்ந்து போன விசயம் பற்றி பிரபல பத்திரிக்கையாளர் கூறியிருக்கிறார்.

வடிவேலு பேட்டி
அப்போது யூடியூப் உலகம் ஆதிக்கம் இல்லாத சமயம். அப்போதைய முதலமைச்சராக ஜெயலலிதா பவர்ஃபுல் பெண்மணியாக இருந்த நேரம் தான். அப்போது நடிகர் வடிவேலுவை பேட்டியெடுக்க சென்றிருந்த போது அவருக்காக காத்திருந்து பின் பேட்டியும் கொடுத்துக்கொண்டிருந்தாராம். அப்போது திடீரென சஃபாரி சூட் போட்டிருந்த ஒருவருடன் கரைவேட்டிகளுடன் நான்கைந்து பேர் வந்தனர். அப்போது இது வடிவேலு வீடுதானே என்று கேட்க, ஆம் நான் தான் என்று கூறியிருக்கிறார்.
உடனே உங்கள் படங்களை ஜெயலலிதா அம்மாவுக்கு ரொம்ப பிடிக்கும் அதனால் அம்மாவுக்கு ஆதரவாக அறிக்கை விடனும் என்று கூறியுள்ளனர். அப்படி இப்படியென்று அவர்கள் வடிவேலுவை புகழ்ந்து தள்ள, மெளனமாக காத்திருந்தார். இதற்கு வடிவேலு, அம்மா மீது ரொம்ப மரியாதை, அவருக்காக உயிரைக்கூட கொடுப்பேன்.

ஜெயலலிதா
ஆனால் கட்சியில் மட்டும் என்னால் சேர முடியாது என்று கூறியிருக்கிறார். பின் அவர்கள் கடுமையாக திட்டி மிரட்டியும் இருக்கிறார்கள். ஆனால் வடிவேலு இறங்காமல் செருப்பா கூட இருப்பேன் ஆனால் கட்சியில் மட்டும் வேண்டாம் என்று கூறியிருக்கிறார். ஒரு மணிநேரம் விதவிதமாக வடிவேலுவை மிரட்ட வடிவேலு மிரண்டு போய்விட்டாராம்.
கண்ணீர் வரும் சமயத்தில் இது செட்டப் தான் அண்ணா என்று அந்த பத்திரிக்கையாளர்கள் வடிவேலுவிடம் கூறுயுள்ளனர். இந்த சம்பவத்தை அப்போது அந்த பத்திரிக்கையில் வெளி வந்த போது வடிவேலு நன்றாக இருக்கிறது என்றும் கூறியிருக்கிறாராம்.