மரியாதை இல்லாமல் நடந்து கொண்ட நமீதா.. பல கோடி வருமானத்தை கெடுத்த ஜெயலலிதா..
தமிழ் சினிமாவில் கிளாமர் குயினாக திகழ்ந்தும் ரசிகர்கள் மத்தியில் மச்சான் என்ற வார்த்தையை கூறி ஈர்த்து வந்தவர் நடிகை நமீதா. தற்போது படங்கள் இல்லாமல் வீட்டில் இருந்து வந்த நமீதா சமீபத்தில் இரட்டை குழந்தையை பெற்றெடுத்தார்.
சினிமாவிலும் அரசியலிலும் ஈடுபட்டு வந்த நமீதா, அதிமுக கட்சியின் செய்தி பரப்பாளராக பணியாற்றி கூட்டங்களில் பேசி வந்தார். அப்போது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நடத்தி கூட்டத்தில் நமீதா பேசியிருந்தார்.
அதிமுக கூட்டம்
அப்போது கூட்டத்தில் ஜெயலலிதா அவர்கள் கூட்டத்தை பார்த்து கையசைத்திருக்கிறார். அவருடன் சேர்ந்து நமீதாவும் கையசைத்துள்ளார்.
ரசிகர்கள் கத்தியதை பார்த்த ஜெயலலிதா கோபத்தில் இருந்துள்ளார். இப்படி அவருக்கு பிடிக்காததால் உடனே ஜெயலலிதா, நமீதாவை எந்த கூட்டத்திற்கும் கூப்பிட கூடாது என்று கண்டீசன் போட்டுள்ளார்.
தலா ஒரு கூட்டத்திற்கு 5 லட்சம் வாங்கி வரும் நமீதா, 20 கூட்டத்திற்கு பேச கமிட்டாகி இருந்தார். இதனால் பல கோடி பறிபோனதாக நமீதா சமீபத்தில் கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தை பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.