ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிக்க மறுத்த நடிகை ஜெயலலிதா!! முக்கிய காரணமே இதுதானாம்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து வேட்டையன் மற்றும் கூலி படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்து வருகிறார். ஆரம்பகாலக்கட்டத்தில் பல ஹீரோயின்களுடன் நடித்து வந்த ரஜினியுடன் ஜோடியாக நடிக்க பல ஹீரோயின்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி 80களில் ரஜினியுடன் நடிக்க முடியாது என்று முன்னணி நடிகை ஒருவர் கூறிய சம்பவம் நடந்திருக்கிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஸ்ரீப்ரியா உள்ளிட்ட பலர் நடித்து மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது பில்லா படம். அந்த படத்தில் ஸ்ரீப்ரியா ரோலில் முதலில் நடிக்க மறைந்த நடிகை ஜெயலலிதாவை தான் கேட்டிருக்கிறார்களாம்.
ஆனால், ஜெயலலிதா சினிமாவில் இருந்து ஒதுங்கிய காலமாக இருந்ததால் தனக்கு அந்த வாய்ப்பு வேண்டாம் என்று உதறியிருக்கிறாராம். அதன்பின் தான் நடிகை ஸ்ரீப்ரியாவுக்கு அந்த ரோல் கிடைத்து சிறப்பாக நடித்திருக்கிறார். இந்த விஷயத்தை ஜெயலலிதாவே ஒரு கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.
அதில், சினிமாவில் தான் மீண்டும் கம்பேக் கொடுக்க திணறுவதாக வெளியான பத்திரிக்கை செய்திகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இப்படியான கடிதத்தை எழுதியிருக்கிறாராம்.

