மனைவியை விகாகரத்து செய்துள்ள ஜெயம் ரவியின் அப்பா 3 முறை திருமணம் செய்துள்ளாரா?
Jayam Ravi
By Yathrika
ஜெயம் ரவி
தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஜோடிகளில் டாப்பில் இருப்பவர்கள் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி.
கடந்த சில மாதங்களாக இவர்கள் பிரிந்துவிட்டார்கள் என சமூக வலைதளங்களில் அரசல் புரசலாக பேசப்பட்டு வந்தது.
அதேசமயம் ஆர்த்தியும் தனது கணவருடன் எடுத்த புகைப்படங்கள் அனைத்தும் தனது இன்ஸ்டாவில் இருந்து எடுத்திருந்தார், எனவே மக்கள் இவர்கள் பிரிந்துவிட்டார்கள் என்பதை புரிந்துகொண்டார்கள்.
நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டு ஜெயம் ரவி மனைவியை பிரிந்ததை உறுதிப்படுத்திவிட்டார்.
இந்த நிலையில் ஜெயம் ரவி பெற்றோர்கள் திருமணம் குறித்து ஒரு தகவல் வலம் வருகிறது.
அதாவது ஜெயம் ரவி அப்பா மோகன் இஸ்லாம் மதம், அவரது மனைவி இந்து மதம். இருவரின் மனமும் ஒன்றிவிட இருவரும் இந்து, கிறிஸ்துவம் மற்றும் இஸ்லாம் என 3 மதங்களின் முறைப்படி 3 முறை திருமணம் செய்துகொண்டார்களாம்.