நடிச்சது போதும்.. ரூட்டை மாற்றிய நடிகர் ஜெயம் ரவி
Jayam Ravi
By Yathrika
ஜெயம் ரவி
எந்த ஒரு சர்ச்சையிலும், பிரச்சனையிலும் சிக்காமல் இருந்த ஒரு நடிகர். மக்களுக்கு பிடித்தமான படங்கள் நடித்து முன்னணி நாயகனாக எந்த ஒரு ஹேட்டர்ஸ் இல்லாத ஒரு பிரபலமாக வலம் வருகிறார்.
சினிமா வாழ்க்கையில் மிகவும் க்ளீனாக இருந்த ஜெயம் ரவி வாழ்க்கையில் இப்போது பிரச்சனை, அதாவது அவர் தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்துள்ளார்.
அதோடு மொத்தமாக சென்னையை விட்டு மும்பை சென்றுள்ளார். அங்கு வீடு, தனது கம்பெனி அனைத்தையும் ஏற்பாடு செய்துள்ளாராம்.
இந்த நிலையில் ஜெயம் ரவி படம் குறித்து ஒரு குட் நியூஸ், தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்துவரும் ஜெயம் ரவி தற்போது தனது ரூட்டை மாற்றியுள்ளார். நடிகராக வலம் வந்தவர் இப்போது இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.
அவரது முதல் பட ஹீரோ யோகி பாபு என்றும் கூறப்படுகிறது.