10 கோடி கூட வசூல் ஆகல அதுக்குள்ள 100 கோடி பட்ஜெட் படத்தில்? இதெல்லாம் தேவைதானா..

Jayam Ravi
By Dhiviyarajan Mar 22, 2023 07:15 AM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

தமிழ் சினிமாவில் பல வித்தியாசமான படங்களில் நடித்து வருபவர் தான் நடிகர் ஜெயம் ரவி. சமீபத்தில் இவர் நடிப்பில் அகிலன் திரைப்படம் வெளியானது.

இதில் பிரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன் போன்ற பல நட்சத்திரம் நடித்திருந்தனர். மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான இப்படத்திற்கு மக்கள் மோசமான விமர்சனமே கொடுத்தனர்.

10 கோடி கூட வசூல் ஆகல அதுக்குள்ள 100 கோடி பட்ஜெட் படத்தில்? இதெல்லாம் தேவைதானா.. | Jayam Ravi Join In Big Budget Movie

100 கோடி பட்ஜெட்

இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி, வேல்ஸ் ராஜ் நிறுவன தயாரிப்பில் ஒரு புதிய படத்திற்கு ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் என்று சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

இந்த படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் ரூ. 100 கோடி பட்ஜெட்டில் உருவாகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரபூர்வமான அறிவிப்பும் வரவில்லை.

ஜெயம் ரவியின் அகிலன் படம் ரூ.10 கோடி வசூல் கூட செய்யாத நிலையில் தற்போது இவர் ரூ.100 கோடி பட்ஜெட் படத்தில் ஒப்பந்தம் ஆகியிருப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

10 கோடி கூட வசூல் ஆகல அதுக்குள்ள 100 கோடி பட்ஜெட் படத்தில்? இதெல்லாம் தேவைதானா.. | Jayam Ravi Join In Big Budget Movie