ஜெயம் ரவி கூட வாழுறது எவ்வளவு கஷ்டம்!! வெளிப்படையாக பேசிய மனைவி ஆர்த்தி..
ஜெயம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் ஜெயம் ரவி. கடந்த ஆண்டு பொன்னியின் செல்வன் 2 படத்தின் ரிலீஸ்க்கு பின் மனைவி ஆர்த்தியின் பிறந்தநாள் கொண்டாட்டத்திலும் கலந்து கொண்டார். பிரபல நட்சத்திரங்கள் கலந்து கொண்ட பிறந்தநாளுக்கு எடுத்த புகைப்படம் இணையத்தில் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி பகிர்ந்திருந்தார்.
மேலும் நடிகைகளுக்கு இணையாக கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்து ஷாக் கொடுப்பார். சமீபத்தில் கூட அவரது பெண் தோழிகளை வரவழைத்து பார்ட்டியும் கொடுத்திருந்தார்.
இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் விஜய் டிவியில் நடிகர் அரவிந்த் சாமி தொகுத்து வழங்கிய நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தியும் கலந்து கொண்டிருக்கிறார்கள். அப்போது அரவிந்த் சாமி, ஜெயம் ரவி மனைவியிடம், ஒரு நடிகருடன் வாழ்வது எவ்வளவு கஷ்டம் என்று கேட்டுள்ளார்.
அதற்கு ஜெயம் ரவி, ஏன் சார் கஷ்டம்னு கேட்கிறீங்க என்று ஷாக்கான ரியாக்ஷன் கொடுத்திருக்கிறார். தொடர்ந்து பேசிய ஆர்த்தி, எப்படி புரிஞ்சிக்கனும் என்பது தான் கஷ்டம்.
சாப்பிடும் போது இதெல்லாம் என்ன, என்ன பண்ணி வெச்சிருக்கீங்கன்னு சொல்லிட்டு திடீர்னு, ராத்திரி எழுந்து ஐஸ்கிரீம் சாப்பிடனும் சொல்லிட்டு வெளியில போய்டுவாரு.
வெளியில போகனும்னா ஒரு ஐஸ்கிரீம் வாங்கணும் நாளு ஐஸ்கிரீம் வாங்கிட்டு வருவாரு என்று கூறியிருக்கிறார், ஆர்த்தி. தினமும் சாப்பிட மாட்டேன் என்று அரவிந்த் சாமியிடம் ஜெயம் ரவி கூறியிருக்கிறார்.