நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தியா இது? நடிகைக்கே டஃப் கொடுப்பாங்களோ..
தமிழ் சினிமாவில் ஜெயம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியவர் மோகன் ரவி. பின் ஜெயம் ரவி என்று மாற்றி கொண்டார். அப்படம் கொடுத்த வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார் ஜெயம்ரவி.
தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து ஆரவ் ரவி, அயான் ரவி என்ற மகன்களை பெற்றெடுத்தார். தன் மனைவியுடன் எடுத்த போட்டோஷூட் வெளியிட்ட ஜெயம் ரவி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
சில ஆண்டுகளுக்கு முன் தனுஷ், திரிஷா, ஜெயம் ரவியுடன் பார்ட்டியில் கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது. அதிலும் தனுஷுடன் சண்டை போடுவது போல் இருந்த புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டு வைரலானது.
இதன்பின் இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வண்ணம் இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார் ஆர்த்தி ரவி. சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் இதோ...
