ஜெயம்ரவிக்கு ஜோடியான டிஜிபியின் மகள்..யார் இந்த தவ்தி ஜிவால் தெரியுமா?
ஜெயம் ரவி34
பிரதர் படத்திற்கு பின் நடிகர் ஜெயம் ரவி அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ஜெயம் ரவி வில்லன் ரோலில் நடிக்க கமிட்டாகி இருப்பதாக தகவல் வந்த நிலையில் படத்தின் பூஜையில் ஜெயம் ரவி கலந்து கொண்டு உறுதிபடுத்தினார்.
இதனை தொடர்ந்து ஜெயம் ரவி, டாடா பட இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் ஜெயம் ரவி ஹீரோவாகவும் நடிக்கிறார். அவரது 34வது படமாக அமையும் இப்படத்தில் கதாநாயகியாக தவ்தி ஜிவால் என்பவர் ஹீரொயினாக நடிக்க கமிட்டாகி இருக்கிறார்.
தவ்தி ஜிவால்
அறிமுகமாகும் தவ்தி ஜிவால் என்பவர் ஏற்கனவே துருவ் விக்ரம், ஜீவா நடிக்கவிருந்த ஒரு படத்தில் நடிகையாக அறிமுகமாகவிருந்தார். ஆனால் இப்படம் தொடங்குவதற்கு முன்பே கைவிடப்பட்டது.
இதனையடுத்து ஜெயம் ரவி படத்தில் கமிட்டாகி இருக்கும் தவ்தி ஜிவால், தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் ஷங்கர் ஜிவாலின் மகள் தானாம்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் தவ்தி ஹிவாலின் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டும் வருகிறது.