மகன் இறப்பிற்கு பிறகு பாரதிராஜாவின் தற்போதைய நிலைமை..
Manoj Bharathiraja
By Yathrika
மனோஜ் பாரதிராஜா
தமிழ் சினிமாவில் கடந்த சில வாரங்களுக்கு முன் இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
தனது மகனின் இறப்பை பாரதிராஜாவால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை, மகனை அடக்கம் செய்யும் நாள் அன்று மிகவும் உடைந்து காணப்பட்டார், எழுந்து நடக்க கூட முடியாத நிலையில் இருந்தார்.
பாரதிராஜா குறித்து அவரது சகோதரர் கூறுகையில், பாரதிராஜாவுக்கு சில நேரம் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.
வீட்டுக்கு வருபவர்களிடம் மனோஜ் பற்றி சொல்லி அழுகிறார். மாடியில் விட்டுவிட்டு வந்தால் அவராகவே கீழே வந்து உட்கார்ந்துகொள்கிறார். முக்கியமாக மருமகளையும் பேத்திகளையும் ஒழுங்காக பார்த்துக்கொள்ள வேண்டும் சொல்லிக்கொண்டிருக்கிறார்.
அவரை நினைத்தால் ரொம்பவே வேதனையாக இருக்கிறது