மறைந்த பிக்பாஸ் பிரபலத்திற்காக மல்யுத்த வீரர் John Cena வெளியிட்ட இரங்கல்! வைரலாகும் புகைப்படம்..

bollywood johncena siddharthshukla
By Jai Sep 04, 2021 01:00 PM GMT
Report

பாலிவுட் சினிமாவை கடந்த ஆண்டு நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை சம்பவத்தால் அதிர்ச்சியில் இருந்தது. இன்னும் தற்கொலை சம்பவமான விசாரனை நடைபெற்று வரும் நிலையில், தற்போது பிக்பாஸ் 13 வின்னர் சித்தார்த் சுக்லா மாரடைபால் மரணமடைந்தார்.

இதுகுறித்து விசாரிக்கையில் இயற்கையான மரணம் கிடையாது மாரடைப்பால் தான் மரணமடைந்துள்ளார் என்றும் ஒருசில உடற் பகுதிகள் பரிசோதனைக்காக அனுப்பிய நிலையில் முடிவுகள் வந்தால் தான் விசாரணையை தீவிரப்படுத்த முடியும் என்று கூறி வந்துள்ளனர்.

இந்நிலையில், 2ஆம் தேதி மரணமடைந்த சித்தார்த் சுக்லாவின் புகைப்படத்தோடு பிரபல அமெரிக்க மல்யுத்த வீரர் ஜான் சீனா பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அமெரிக்க மல்யுத்த வீரர் ஜான் சீனா போட்ட இரங்கலுக்கு இந்திய ரசிகர்கள் நன்றி தெரிவித்து வருகிறார்கள்.