சிவக்குமார் ஒரு சாதி வெறியர்! சூர்யா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய பிரபலம்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர்கள் சூர்யா மற்றும் கார்த்திக். மூத்த நடிகர் சிவக்குமாரின் மகன்களாக சினிமாத்துறையில் நல்ல இடத்தினை பிடித்தும் மரியாதையுடனும் வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் சிவக்குமார் ஒரு சாதி வெறியர் என்றும் அவரது குடும்பத்தினரும் இப்படி நடக்கிறார்கள் என்று பிரபல அரசியல் பிரமுகர் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான ஜெய் பீம் படம் தற்போது மக்களிடையே நல்ல இடத்தினை பிடித்துள்ளது. ஆனால் நடிகர் சிவக்குமாரிடம் அவ்வளவு சாதிவெறி இருக்கிறது என்றும் என்னிடம் கீழ்த்தரமாக நடந்து கொண்டுள்ளார் என்று கூறியுள்ளது, சூர்யா மற்றும் கார்த்திக் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து யாரிடமும் கூறவில்லை இதுதான் முதன் முறை என்று கூறியுள்ள ஜான் பாண்டியன், கோவையில் விமானத்தில் என் இருக்கைக்கு பக்கத்தில் சிவக்குமார் மற்றும் அவரது மனைவி, சூர்யா, கார்த்திக் அமர்ந்திருந்தனர். நான் சூர்யாவிடம் சென்று புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சிவக்குமாரிடம் அனுமதி கேட்டேன்.
அனுமதி அளித்து பின் நீங்கள் புகைப்படம் எடுக்கக்கூடாது என்று கூறி காயப்படுத்தினார். தமிழ் சினிமாவில் உயர்ந்த இடத்தில் இருக்கும் சிவக்குமார் ஏன் இப்படி நடந்து கொண்டார் என்று எனக்கு தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.