பெண்களிடம் தகாத முறையில் நடந்துகொண்ட ஜான் விஜய்!! ஆதாரங்களை வெளியிட்ட சின்மயி

Actors Chinmayi Tamil Actors Tamil Singers
By Dhiviyarajan Jul 27, 2024 10:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஜான் விஜய்.

இவர் திருடன் போலீஸ், வெள்ளைக்கார துரை, எனக்குள் ஒருவன், கோ2, கபாலி, சார்பட்டா பரம்பரை, பிச்சைக்காரன் 2, சலார் எனப் பல படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழ் மொழி படங்களை தாண்டி மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி எனப் பல்வேறு மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் ஜான் விஜய் குறித்து பரபரப்பு தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதன் படி, ஜான் விஜய் பெண் பத்திரிக்கையாளர் ஒருவருடன் தகாத முறையில் நடந்துகொண்டார்.

அவர் எப்போதுமே சென்னையில் உள்ள கிளப் மற்றும் பப்களுக்கு செல்வார். அங்கு இருக்கும் பெண்களிடமும் தவறான நோக்கத்தில் அணுகுவார்.

அவருடைய அணுகுமுறை பெண்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் அவர் தொடர்ந்து தொல்லை கொடுத்து கொண்டே இருப்பார் என்று பெண் பத்திரிக்கையாளர் தெரிவித்துள்ளார். இந்த தகவலை பிரபல பாடகி சின்மயி தனது எக்ஸ் தளத்தில், ஸ்கீரின் ஷாட்டாக பதிவிட்டு இருக்கிறார்.

இதோ அந்த பதிவு.  

Gallery