விஜய் நல்ல குடும்பஸ்தனாக, நல்ல கணவனாக இருக்கணும்!! மீண்டும் சீண்டிய அரசியல் பிரமுகர்.

Vijay Gossip Today Sangeetha Vijay Nainar Nagendran Tamil Nadu Election 2026
By Edward Apr 11, 2026 02:15 PM GMT
Report

விஜய்

தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 12 நாட்கள் இருக்கும் நிலையில், அனைத்து கட்சித் தலைவர்களும் தங்கள் பரப்புரையை விறுவிறுப்புடன் நடத்தி வருகிறார்கள்.

ஆனால் புதிதாக கட்சியை ஆரம்பித்த விஜய் போலிசார் அனுமதி அளித்த கூட்டகளுக்கும் போகாமல் ரத்து செய்து வருகிறார். நேற்று காரைக்குடி பிரச்சாரத்திற்காக சென்றவர் ரோடு ஷோ மட்டுமே நடத்தி வீடு திரும்பினார். இது தவெகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

விஜய் நல்ல குடும்பஸ்தனாக, நல்ல கணவனாக இருக்கணும்!! மீண்டும் சீண்டிய அரசியல் பிரமுகர். | Joseph Vijay Must First Be Good Family Man Nainar

நல்ல கணவனாக இருக்கணும்

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் நாயினார் நாகேந்திரன் விஜய்யை விமர்சித்து பேசியிருக்கிறார். அதில், ஜோசப் விஜய் நேற்று காரைக்காலில் ரோடு ஷோ நடத்தினார் என்று கூறினார்கள். அவர் சைக்கிள் ஓட்டி வந்தார், கைக்காட்டிக் கொண்டும், ஆடிக்கொண்டும் ஓடிக்கொண்டும் வந்தார் என்றனர்.

விஜய் நல்ல குடும்பஸ்தனாக, நல்ல கணவனாக இருக்கணும்!! மீண்டும் சீண்டிய அரசியல் பிரமுகர். | Joseph Vijay Must First Be Good Family Man Nainar

எல்லோரும் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகிவிட முடியாது, அதற்காக தனி கொள்கைகள் வேண்டும், தனி அமைப்புகள் வேண்டும், இயற்கையான உணர்வுகள் வேண்டும். ஏதோ திமுகவை ஆட்சியில் அமர்த்துவதற்காக ஜோசப் விஜய் தனியாக கட்சி ஆரம்பித்துள்ளார்.

என்னை பொறுத்தவரைக்கும் முதலில் அவர் நல்ல குடும்பஸ்தனாக இருக்க வேண்டும், ஒரு நல்ல கணவனாக இருக்க வேண்டும், மக்களுக்காக ஏதாவது உதவ வேண்டும், செய்ய வேண்டும். சைக்கிள் ஓட்டுவதற்காக அரசியலுக்கு வரக்கூடாது, இதெல்லாம் ஒரு கேலிக்கூத்தான விஷயம் என்று விமர்சித்துள்ளார்.