பணத்துக்காக இப்படி நடிக்கலையா? Fire ரச்சிதா மகாலட்சுமியை கண்டபடி விமர்சித்த பிரபலம்..
Fire ரச்சிதா மகாலட்சுமி
சின்னத்திரை சீரியல் நடிகையாக திகழ்ந்து பின் திரைப்படங்களில் முக்கிய ரோலில் நடித்து தற்போது பிஸியாக இருந்து வருகிறார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் படங்களில் கதாநாயகியாக நடித்து வரும் ரச்சிதா, ஃபயர் என்ற படத்தில் நடிகர் பாலாஜி முருகதாஸுடன் மிகவும் நெருக்கமான படுக்கையறை காட்சியில் நடித்து அனைவரையும் வாய் பிளக்க வைத்தார்.
ரச்சிதாவின் நடிப்பை பலரும் விமர்சித்த நிலையில் பத்திரிக்கையாளர் சேகுவாரா கண்டபடி விமர்சித்துள்ளார். அதில் அவர், ஃபயர் படம் உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறது.
சேகுவாரா
ஆனால் இதனை குடும்பத்துடன் பார்க்கவே முடியாது. இந்தப்படத்தில் ஆபாசம் ரொம்பவே தூக்கலாக இருக்கிறது. படத்தில் நடித்திருக்கும் நடிகைகள் அனைவருமே கிளாமராகத்தான் நடித்திருக்கிறார்கள். ஆனால் ரச்சிதா மகாலட்சுமி உச்சக்கட்டமாக நடித்திருக்கிறார்.
இவ்வளவு ஆபாசம் தேவையில்லையோ என்றுதான் தோன்றுகிறது. பணத்துக்காக இப்படி ஆபாசமாக நடிக்கவில்லை என்று ரச்சிதா கூறுகிறார். எனக்கு கோபம்தான் வருகிறது. பின் என்ன சமூக சேவைக்காகவா இந்த மாதிரி காட்சியில் நடித்தார்.
பணம் வாங்காமல் இப்படிப்பட்ட ரோலில் நடித்தேன் என்று ரச்சிதாவால் சொல்ல முடியுமா, ஏன் இப்படி எல்லாம் பேச வேண்டும். பாபநாசம் படத்தை குடும்பத்தோடு சென்று பார்க்கலாம், இதனை பார்க்க முடியாது. இந்த இடத்திலேயே இந்தப்படம் அடி வாங்கிவிட்டது என்று சேகுவாரா விமர்சித்திருக்கிறார்.