நிறுத்தப்படுகிறதா நாக சைதன்யா - சோபிதா திருமணம்!! பரபரப்பை கிளப்பும் பிரபலம்..

Samantha Naga Chaitanya Actors Sobhita Dhulipala Nagarjuna
By Dhiviyarajan Aug 16, 2024 06:30 AM GMT
Report

நாக சைதன்யா கடந்த 2017 ம் ஆண்டு நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் சில காரணத்தால் இருவரும் பிரிந்துவிட்டனர்.

அதனை அடுத்து நாக சைதன்யா, நடிகை சோபிதாவை டேட்டிங் செய்து வந்த நிலையில், அண்மையில் இருவரும் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த வருட இறுதிக்குள் இவர்களது திருமணம் நடைபெறும் என்று சொல்லப்படுகிறது.

சமீபத்தில் பிரபல ஜோசியர் ஒருவர், 2027ம் ஆண்டில் நாக சைதன்யா - சோபிதா பிரிந்துவிடுவார்கள். சேர்ந்து வாழ மாட்டார்கள். அதன் பின் மீண்டும் நாக சைதன்யாவுக்கு ஒரு பெண் காதல் ஏற்படும் என்று தெரிவித்து இருந்தார். இந்த விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக பேசிய பிரபல சினிமா பத்திரிகையாளர் சுபைர், பிரபலங்கள் மீது விமர்சனம் வைத்தால் தன் மீது அந்த வெளிச்சம் ஏற்படும் என்பதற்காக செய்வது தான். ஜோதிடர் சொல்லும் எல்லா விஷயம் நடந்திருக்கா?.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்து முதலமைச்சராக மாறுவர் என்று சொன்னார்கள் அது நடந்ததா?. சென்னை பெருவெள்ளம் வந்த போது இந்த வருஷம் நல்ல இருக்கும் என சொன்னார்கள்.ஆனால் அப்படி நடந்ததா? ஜோசியம் என்பது ஒரு சில விஷயம் பலிக்கும் என சுபைர் கூறியுள்ளார்.

நிறுத்தப்படுகிறதா நாக சைதன்யா - சோபிதா திருமணம்!! பரபரப்பை கிளப்பும் பிரபலம்.. | Journalist Subair Talk Naga Chaitanya Marriage