அம்பானி இருக்கட்டும்!நூடுல்ஸ் விற்று 15 ஆயிரம் கோடிக்கு அதிபதியான கோடீஸ்வரர்..
பினோத் சவுத்ரி
உலகளவில் பொருளாதாரத்தில் பங்களிப்பதில் கோடீஸ்வரர்களின் பங்கு அதிகமாக இருக்கும். அந்தவகையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராக இருந்து வருகிறார். ஆனால் நம் அண்டை நாடான நேபாளத்தின் மிகப்பெரிய பணக்காரர் யார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அவர் வேறுயாருமில்லை பினோத் சவுத்ரி தானாம். அவரின் தாத்தா இந்தியாவுக்கு வந்து ஜவுளித்தொழிலை தொடங்கி நல்ல வேற்றியை பெற்றுக்கொடுத்துள்ளார்.
தாத்தா மறைவு, தந்தியின் உடல்நலக்குறைவு காரணமாக தன் குடும்ப ஜவுளித்தொழிலின் உற்பத்தியை விரிவாக்கம் செய்யும் பொறுப்பில் இறங்கி உலகளவில் பெரிய சாம்ராஜ்யமாக்கினார் தொழிலதிபர் பினோத் சவுத்ரி.
சொத்து மதிப்பு
இவரின் Wai Wai Noodles அறிமுகப்படுத்தி மிகப்பெரிய வெற்றியை நேபாள மக்களிடம் இருந்து பெற்றார். பினோத் சவுத்ரியின் சொத்து மதிப்பு 1.8 பில்லியன் அமெரிக்க டாலராகும். இந்திய மதிப்பில் சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.
2015ல் நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பத்தின் போது பள்ளிகள் வீடுகள் கட்டவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் சுமார் 20 கோடி ரூபாய் நன்கொடையாகவும், 5 லட்சம் வை வை நூலில்ஸ் பாக்கெட்டுகள், ஏராளமாக ஜூஸ் அட்டைப்பெட்டிகள், உணவு மற்றும் தண்ணீர்களை நன்கொடையாக கொடுத்து உதவினார் பினோத் சவுத்ரி.