பிக்பாஸ் சீசன் 10-க்கு நான் போகல!! மாதம்பட்டி ரங்கராஜின் 2வது மனைவி ஜாய் ஓபன்..

Bigg Boss Vijay Television Tamil TV Shows Madhampatty Rangaraj Bigg Boss 10 Tamil
By Jai Sep 05, 2026 07:30 AM GMT
Report

பிக்பாஸ் சீசன் 10

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017 முதல் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் பிக்பாஸ். செப்டம்பர் 6 ஆம் தேதி நடிகர் விஜய் சேதுபதியால் தொடங்கவுள்ளது பிக்பாஸ் தமிழ் சீசன் 10.

பிக்பாஸ் சீசன் 10-க்கு நான் போகல!! மாதம்பட்டி ரங்கராஜின் 2வது மனைவி ஜாய் ஓபன்.. | Joy Crizildaa Not Participating Bigg Boss 10 Tamil

தற்போது பிக்பாஸ் சீசன் 10 வீட்டின் பிரமாணமான ஹோம் டூர் விவரங்கள், புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வந்தது.

நான் போகல

இந்நிலையில் நாளை தொடங்கவுள்ள பிக்பாஸ் சீசன் 10ல் நான் கலந்து கொள்ளவில்லை என்று மாதம்பட்டி ரங்கராஜின் 2வது மனைவி ஜாய் கிரிஸில்டா ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 10-க்கு நான் போகல!! மாதம்பட்டி ரங்கராஜின் 2வது மனைவி ஜாய் ஓபன்.. | Joy Crizildaa Not Participating Bigg Boss 10 Tamil

அதில், கடந்த சில நாட்களாக பிக்பாஸ் சீசன் 10 வீட்டிற்குள் நான் போவதாக பரவி வரும் தகவல்கள் எனக்கு பலர் அன்பு காட்டுவதை பார்த்து நெகிழ்ந்து போனேன். எனக்கு இந்த வாய்பை வழங்க முன்வந்த தொலைக்காட்சிக்கு நன்றி. இந்த வீட்டிற்குள் போகப்போவதில்லை என்று தெளிவுப்படுத்துகிறேன்.

அதற்கு காரணம் என் மகன் ராஹா தான். இன்னும் குட்டிப்பையனாக அவன் இருப்பதால், அவனை விட்டுவிட்டு பிக்பாஸ் 10 வீட்டுக்குள் செல்வது, ஒரு தாயாக எனக்கு சரியாகப்படவில்லை. இந்த வாய்ப்பு வந்தபோது நான் அதை மரியாதைக்குரிய வகையில் வேண்டாம் என்று கூறிவிட்டேன். அது ஒரு இலகுவான முடிவாக இல்லை என்று அந்த பதிவில் பகிர்ந்துள்ளார் ஜாய் கிரிஸில்டா.