தேவரா படத்தின் நெகட்டிவ் விமர்சனம்!! ஜூனியர் NTR பேனரை கொளுத்திய ரசிகர்கள்..

Janhvi Kapoor N. T. Rama Rao Jr.
By Edward Sep 27, 2024 08:30 AM GMT
Edward

Edward

Report

தேவரா விமர்சனம்

இயக்குநர் கொரட்டல சிவா இயக்கத்தில் ஜூனியர் என் டி ஆர், சைஃப் அலி கான், ஜான்வி கபூர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் அனிருத் இசையில் இன்று செப்டம்பர் 27 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான படம் தேவரா.

படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் தற்போது ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாக பலர் இணையத்தில் நெகட்டிவ் விமர்சனத்தை பகிர்ந்து வருகிறார்கள்.

தேவரா படத்தின் நெகட்டிவ் விமர்சனம்!! ஜூனியர் NTR பேனரை கொளுத்திய ரசிகர்கள்.. | Jr Ntr Devara Negative Review Fans Fire Ntr Poster

ஏற்கனவே இயக்குநர் கொரட்டல சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி, ராம் சரண் நடிப்பில் ஆச்சார்யா படம் வெளியாகி படுதோல்வியை சந்தித்ததோடு பல கோடி நஷ்டத்தை கொடுத்தது.

தற்போது ஜூனியர் என் டி ஆர் நடிப்பில் தேவரா படத்தை எடுத்ததால் பலருக்கும் தலைவலி வந்தது தான் மிச்சம் என்று தலைத்தெறித்து ஓடுகிறார்களாம்.

இந்நிலையில் பெங்களூருவில் இருக்கும் ஒரு தியேட்டருக்கு வெளியில் ஜூனியர் என் டி ஆரின் போஸ்டரை ரசிகர்கள் கொளுத்தி இருக்கிறார்கள்.

ஒரு நல்ல சீன் கூட இல்லை மாஸ் ஹீரோவை வைத்து மோசம் செய்துவிட்டார் கொரட்டல சிவா என்று அவரது ரசிகர்கள் தங்களின் ஆதங்கங்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

தேவரா போஸ்டரை கொளுத்திய ரசிகர்களின் வீடியோவை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்..