ஜூனியர் NTR-ஐ இந்தியன் 2 தாத்தா ரேஞ்சுக்கு மாத்திட்டீங்களே!! War 2-வை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்..

Hrithik Roshan Tamil Memes Coolie N. T. Rama Rao Jr.
By Edward Aug 16, 2025 07:30 AM GMT
Report

கூலி, வார் 2

இந்தியளவில் பிரம்மாண்டமாக உருவான இரு படங்கள் ஆகஸ்ட் 14 ஆம் தேதி ரிலீஸாகியது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி படமும், ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என் டி ஆர், கியாரா அத்வானி நடித்த வார் 2 படமும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி ஒரே நாளில் ரிலீஸாகியது.

இரு படமும் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், கூலி படத்தை நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். அதேபோல் வார் 2 படத்தினை பார்த்த நெட்டிசன்கள், இணையத்தில் பகிர்ந்து கலாய்த்து வருகிறார்கள்.

ஜூனியர் NTR-ஐ இந்தியன் 2 தாத்தா ரேஞ்சுக்கு மாத்திட்டீங்களே!! War 2-வை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்.. | Jr Ntr Sixpack Scenes War 2 Huge Troll Material

ஜூனியர் என்டிஆர்

அதிலும் குறிப்பாக ஜூனியர் என்டிஆர் சட்டையை கழட்டி சிக்ஸ்பேக் காட்டும் காட்சியை வைத்து இந்தியன் தாத்தா சிக்ஸ் பேக் வைத்த காட்சியுடன் ஒப்பிட்டும், ராஜமெளலி டோலிவுட்டில் கெத்தாக காட்டிய நடிகர்களை பாலிவுட் இயக்குநர்கள் இப்படி காமெடி பீஸாக மாற்றிவிட்டாரே என்றும் கலாய்த்து வருகிறார்.

என்னால் ரசிகர்களால் கலாய்க்கப்பட்டு வந்தாலும் கூலி, வார் 2 இரு படங்களும் கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ரீதியில் வேட்டையாடி வருகிறது.