பல ஆயிரம் கோடி சொத்து.. ராதாவின் ரகசியத்தை உடைத்த பிரபலம்..
80, 90ஸ் காலக்கட்டத்தில் தென்னிந்திய சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாகவும் முன்னணி நடிகையாகவும் திகழ்ந்து வந்தவர் தான் நடிகை ராதா. 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வந்த ராதா, தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக கலந்து கொண்டு வருகிறார். ராதா குறித்து தமிழா தமிழா பாண்டியன் சர்ச்சையாக பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
தமிழா தமிழா பாண்டியன் சர்ச்சை
15 வயதில் பாரதிராஜாவால் அலைகள் ஓய்வதில்லை படத்தில் அறிமுகமானா ராதா. பின் சிவாஜி, ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ் போன்றவர்களுடன் நடிகையாகிவிட்டார். ராதாவிற்கு எங்கு என்ன பிரச்சனை வந்தாலும் அங்கு முன்னாடி வந்து நின்று தீர்த்து வைப்பதே பாரதிராஜாவாகத்தான் இருக்கும்.
இதற்காக தனது உதவியாளர் சித்ரா லட்சுமணனை ராதாவின் உதவியாளராக அனுப்பி வைத்து கடைசி வரை, தன் கட்டுப்பாட்டில் ராதாவை பாரதிராஜா வைத்திருந்தார். இன்று ராதாவிற்கு பல ஆயிரம் கோடி சொத்து இருக்கிறது.
பல ஆயிரம் கோடி சொத்து
எம்ஜிஆரை சந்தித்த, ராதா, அம்பிகா அவரது அம்மா, ஒரு ஸ்டுடியோ ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆசையை கூறியதால் விருகம்பாக்கத்தில் 10 ஏக்கர் நிலத்தை எம்ஜிஆரால் கொடுக்கப்பட்டது. ARS கார்டன் என்ற பெயர் வைக்கப்பட்டதால் அந்த தெருவுக்கு அதே பெயர் வைத்தார்.
அதாவது அம்பிகா ராதா சரசம்மாள்(ARS), சுதந்திர போராட்ட தியாகிக்கு கூட இப்படியாஅ பெயர் வைக்கவில்லை. இதேபோல் திருவனந்தபுரத்திலும் இந்த பெயரில் கார்டன் உள்ளது, இதுதான் ராதாவின் அம்மாவின் தொழில் சூட்சமம்.
இப்போது ராதா பெரிய தொழிலதிபராக இருந்து அவர் பெயரில் 5 ஸ்டார் ஓட்டல், ரெஸ்டாரண்ட், சினிமா, பள்ளிக்கூடம் என்று பல ஆயிரம் கோடி சொத்து இருக்கிறது. ராதாவின் ரோல் மாடலே ஜெயலலிதா, ஸ்ரீப்ரியா தான் என்று தமிழா தமிழா பாண்டியன் கூறியது தற்போது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.