சூர்யா மடியில் என் உயிர் பிரியணும்!! ஜோதிகா எமோஷனல் வீடியோ..
சூர்யா - ஜோதிகா
தென்னிந்திய சினிமாவில் ஃபேவரெட் தம்பதிகளாக திகழ்ந்து வரும் சூர்யா - ஜோதிகா இருவரும் மீண்டும் திருமணம் செய்து கொண்டது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. திருமணமாகி இரு தசாபதங்கள் கடந்துவிட்டாலும் இருவருக்கும் இடையிலான காதல் இன்னும் அப்படியே இருப்பதை பலரும் வியந்து பார்த்தும் வருகிறார்கள்.

அதிலும் அவர்கள் வெளியிட்ட வீடியோவில் ஜோதிகா, ஒரு கட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கியது பலரது கவனத்தையும் ஈர்த்தது.
சூர்யா மடியில்
என் கடைசி மூச்சு உன்னுடன் இருக்க வேண்டும், நீ இல்லாமல் நான் எப்படி தூங்குவேன் என்று எனக்கு தெரியவில்லை. நீ எனக்கு முன்னால் இவ்வுலகத்தைவிட்டு சென்றுவிட்டால், நானும் உன்னைத்தேடி அங்கே வந்துவிடுவேன்.
ஏனென்றால், நீ சொர்க்கத்திலும் இருப்பவர்கலை உன் பேச்சால் போரடித்துவிடுவாய் என்று எனக்கு தெரியும். சூர்யாவின் மடியில் என் உயிர் பிரிய வேண்டும் எனக்கு எல்லாமே அவர்தான் என்று ஜோதிகா நெகிழ்ச்சியுடன் பேசியிருப்பது தான் தற்போதைய டிரெண்ட் வீடியோ..