இன்ஸ்டாகிராமில் சாதனை படைத்த சூர்யா மனைவி நடிகை ஜோதிகா! ஒரே நாளில் இத்தனை லட்சமா?

suriya socialmedia tamilactress jyotika udanpirappu
By Edward Aug 31, 2021 06:13 AM GMT
Report

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக அஜித், விஜய், சூர்யா, விக்ரம் படத்தில் நடித்து கொடிக்கட்டி பறந்த நடிகையாக வளம் வந்தவர் நடிகை ஜோதிகா. வாளி படத்தில் அறிமுக நடிகையாக நடித்தபின் முன்னணி நடிகை என்ற அந்தஷ்த்தை பெற்று பிரபலமானார்.

இதையடுத்து, நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு இரு குழந்தைகளுக்கு தாயானார். பின் சினிமாவில் இருந்து விலகி குடும்பத்தை பார்த்து கொண்டார். தற்போது ரீஎண்ட்ரி கொடுத்து வரும் ஜோதிகா உடன்பிறப்பு படட்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கணவர் சூர்யா ஏற்கனவே இன்ஸ்டாகிராம் சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். தற்போது அவர் மனைவி ஜோதிகாவும் இன்ஸ்டாகிராம் ஆரம்பித்துள்ளார். ஆரம்பித்து ஒரேநாளில் சுமார் 1.4 மில்லியன் ஃபாலோவர்ஸ்களை பெற்றுள்ளார். ஒரே நாளில் தமிழ் பிரபலம் இப்படி இன்ஸ்டாவில் 14லட்சம் ஃபாலோவர்ஸை பெறுவது முதல் முறை என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.