தமிழில் டைட்டில் இல்லையா? விஜய்யை மறைமுகமாக திட்டிய பிரபல தயாரிப்பாளர்

producer k rajan
By Edward Sep 10, 2021 04:00 AM GMT
Report

தற்போதைய தமிழ் சினிமாவில் படத்தின் பெயர்களை வைக்க ஒரு லிமிட் இருக்கிறது என்று கூறுவார்கள். அப்படியான தமிழ் பெயரை படங்களுக்கு வைத்தால் தமிழக அரசும் சினிமா சங்கத்திலும் உரிய மான்யங்கள் வழங்கப்படும் என்றும் வைக்காதவர்களுக்கு சில நிபந்தனைகளும் வழங்கப்படுவதுண்டு.

அப்படியான தமிழ் பெயர்கள் தற்போது வெளி வரும் படங்களில் இருப்பதில்லை என்று சினிமா வட்டாரத்தில் ஒரு விமர்சனமாக கூறப்பட்டு வருகிறது. அந்தவகையில் சமீபத்தில் அடங்காமை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட தயாரிப்பாள கே ராஜன் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். மும்பை படம் எடுத்து தமிழகத்தில் படத்தை எடுக்க முன் வரமாட்டார்கள் என்றும்.

தமிழ் பேசும் நடிகைகளை விட்டுவிட்டு மும்பை நடிகைகள தேர்வு செய்ய அங்கு ரூம் போட்டி செலெக் செய்கிறார்கள் என்று பேச ஆரம்பித்துள்ளார். மேலும், முதலில் தமிழன் என்ற உணர்வு இருக்க வேண்டும் என்று தமிழில் இல்லாத தலைப்பா? திருக்குறளில் ஆயிரல் பெயர் இருக்கிறது. கம்பராமாயணத்தில் ஆயிரம் இருக்கிறது. கண்ணதாசன் படத்தில் ஆயிரம் இருக்கிறது என பேசிய கே ராஜன், ஏன் ஆங்கிலம் பெயர். ஆங்கிலத்தை உங்க அப்பன் உருவாக்கினாரா?.என்று கூறி விளாசி பேசியுள்ளார்.

இப்படி தயாரிப்பாளர் கே ராஜன் பேசியது நடிகர் விஜய்யின் படங்களாக இருக்குமோ என்று பலர் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.