காசுக்காக கல்யாணத்தை விக்கிறவர் நயன்தாரா.. தனுஷால் பாதிக்கப்பட்டவங்க!! பிரபல தயாரிப்பாளர்..
நயன்தாரா - தனுஷ் பிரச்சனை
தென்னிந்திய சினிமாவில் தற்போது பெரியளவில் பேசப்பட்டு வரும் சம்பவம என்றால் அது நயன் தாரா - தனுஷ் பிரச்சனை தான். தங்களின் ஆவணப்படத்தில் நானும் ரவுடி தான் படத்தின் காட்சி 3 நொடி இருந்ததால் தனுஷ் 10 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். இதனால் கோபத்தில் நயன் தாரா தனுஷை விமர்சித்து அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.
தற்போது இதுகுறித்து பலர் பேசி வரும் நிலையில், தயாரிப்பாளர் கே ராஜன், தனுஷையும் நயன் தாராவையும் கடுமையாக விமர்சித்து பேசியிருக்கிறார். நானும் ரவுடி தான் படத்தின் போது விக்னேஷ் சிவனும் நயன் தாராவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். அந்த கல்யாணம் கூட எல்லா மக்களும் வாழ்த்துறதுக்கு இல்லாமல் மீடியோக்களை அனுமதிக்கவில்லை. அவர்களே கேமராக்களை வைத்து வீடியோ எடுத்து ஒரு கம்பெனி விலைக்கு விற்கிறார்கள்.
கல்யாண வீடியோ
உலகத்திலேயே தன்னுடைய கல்யாணத்தை வீடியோ எடுத்து விலை பேசி விற்றவர்களில் ஒருவர் நயன் தாரா தான், வேறு யாரும் கிடையாது. அதில் தனுஷ் பாட்டும், விளம்பரத்திலும் வருவதை எதிர்த்து நோட்டீஸ் அனுப்புகிறார்கள். அந்த சின்ன விஷயத்தை விட்டு இருக்கலாம், என்னமோ தெரியவில்லை இருவருக்கும் ஏதோ ஒரு பாதிப்பு, பின்னால் ஏதோ விஷயம் இருக்கிறது. பெரியளவில் பேசப்பட வேண்டிய கங்குவா படத்தின் டாக்கை அப்படியே நயன் தாரா கெடுத்துவிட்டார்.
மூன்று நான்கு நாள் யோசித்து தான் நயன் தாரா அந்த அறிக்கை வெளியிட்டுள்ளார். தனுஷால் பாதிக்கப்பட்ட நடிகைகள் தான் நயன் தாராவுக்கு சப்போர்ட் செய்கிறார்கள். தனுஷுக்கு ஆதரவு தெரிக்கவில்லை என்றால் யாரிடமும் நல்லமுறையில் நடந்துக்கொள்ளவில்லை. பல டார்ச்சர்களை தனுஷ் தயாரிப்பாளர், குடும்பத்தினருக்கு கொடுத்ததால் தான் அவருக்கு ஆதரவாக வரவில்லை. தனுஷ், மற்ற துன்பத்தில் இன்பம் காண்பவர் என்று நயன் தாரா சொல்வது சரிதான்.
பணத்தாசை
படம் நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டு இந்தி பக்கம் செல்வது போன்ற பல தயாரிப்பாளர்களை வதம் செய்திருக்கிறார். நயன் தாரா சொல்வது உண்மைதான். ஆனால், ரசிகர்கள் இந்த வீடியோவை பார்க்க ஆசைப்படுகிறார்கள் என்று நயன்தாரா கூறியது குறித்த கேள்விக்கு, நீ வியாபாரம் பண்ணிட்டு நெட்ஃபிளிக்ஸ்ல வீடியோ விடுறியே.
இந்த கல்யாணத்தை வீடியோவில் வெளியிட்டால் எத்தனை மக்கள் பார்த்திருப்பாங்க, அதையே காசாக்கிற என்றால் என்ன குணம், பணத்தாசை, கல்யாணத்தைகூட காசுக்காக விற்றவர்கள் என்ற கெட்ட பேருதான். ரசிகர்களுக்கு கல்யாணத்தின் போதே விட்டிருக்கலாமே, ஏன் 2 வருஷம் காத்திருக்கிறாய். கல்யாணத்தை சொந்தமாக வீடியோ எடுத்து விற்றது தவறு என்று தயாரிப்பாளர் கே ராஜன் விமர்சித்துள்ளார்.
பொறுப்பு துறப்பு : இந்த செய்தியில் குறிப்பிட்டுள்ள தகவல் தயாரிப்பாளர் கே ராஜன் அளித்த பேட்டியில் கூறிய கருத்தே தவிர விடுப்பு தளத்திற்கு இந்த கருத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.