இப்படி இருந்தா வாய்ப்பிளக்க தான் செய்வாங்க! நயன் தாரா-சமந்தா ராஜ வாழ்க்கை வாழும் விக்னேஷ்
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வருபவர் விக்னேஷ் சிவன். நடிகர் சிம்புவின் போடாபோடி படத்தினை இயக்கி இயக்குனராக அவதாரம் எடுத்தார். இதன்பின் ஒருசில படங்களுக்கு பாடலாசிரியராகவும் விஐபி படத்தின் நடிகராகவும் இருந்து வந்தார்.
அதன்பின் நானும் ரெளடி தான் படத்தின் ஹிட் கொடுத்தப்பின் சூர்யாவின் என் ஜி கே படத்தினை இயக்கினார். முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பாடல் வரிகளை கொடுத்து வந்த விக்னேஷ் ஆசையாக காதலித்து வரும் லேடி சூப்பர் ஸ்டாருடன் சமீபத்தில் நிச்சயத்தையும் முடித்துள்ளார்.
திருமணம் எப்போது என்று கேட்கும் போதெல்லாம் இருவரும் படங்களின் வேலைகளில் பிஸியாகவும் பண்டிகைகளின் போது ரொமான்ஸிலும் இருந்து வந்தனர். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன் தாரா - சமந்தா இணைந்து நடித்துள்ளனர்.
வரும் 28 ஆம்தேதி இப்படம் தியேட்டரில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் அனிரூத் இசையில் வெளியான டூ டூ டூ பாடலின் பிரமோ வீடியோ இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
இரு கதாநாயகிகளுக்கு நடுவில் விஜய் சேதுபதி ஆடும் ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் வாய்ப்பிளக்க வைத்துள்ளது. அதிலும் சமந்தா நயன் தாரா எக்ஸ்பிரஷன் வேற வெவல் இருப்பதாக ஜொல்லுவிட்டு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.






