கைக்கோர்த்தபடி பிரபல நடிகருடன் சமந்தா..ஜோடியாக லேடி சூப்பர்ஸ்டாரின் காதலர் வெளியிட்ட புகைப்படம்
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக திகழ்ந்து வருபவர் விக்னேஷ் சிவன். தற்போது நடிகை நயன் தாராவுடன் பல ஆண்டுகளாக காதலில் இருந்து வருகிறார். சமீபத்தில் லேடிசூப்பர் ஸ்டார் காதலர் விக்னேஷ் சிவன் பற்றியும் நிச்சயதார்த்தம் திருமணம் குறித்த தகவலை நெற்றிக்கண் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.
தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார் நயன் தாரா மற்றும் சமந்தா. விஜய் சேதுபதியுடன் இருவரும் இணைந்து நடிக்கவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் ஆரம்த்துள்ளனர். படப்பிடிப்பு தளத்தின் ஒருநாள் தொகையை குறைக்க விஜய் சேதுபதி பாண்டிச்சேரி முதல்வரை சந்தித்து கோரிக்கை விடுத்த புகைப்படம் வெளியாகியது.
தற்போது படப்பிடிப்பு ஆரம்பிக்க விஜய் சேதுபதி சமந்தா, நயன் தாரா விக்னேஷ் சிவன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அதில் கைக்கோர்த்த படி சமந்தா இருக்கும் புகைப்படம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது.
