அஜித்தே கடவுளே!! கேரளா வாட்டர் மெட்ரோவில் பரவும் AK புகழ்..
அஜித்தே கடவுளே
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வரும் நடிகர் அஜித் குமார், விடாமுயற்சி, குட் பேட் அக்லி போன்ற படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
விடாமுயற்சி ஷூட்டிங் முடிந்த நிலையில் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங் ஸ்பெயினில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் கார் ரேஷில் ஈடுபடவுள்ளார் அஜித். கடந்த சில வாரங்களாகவே எந்த பக்கம் சென்றாலும் அஜித்தே கடவுளே என்கிற கோஷம் தான் கேட்டுக்கொண்டிருக்கிறது.
அந்தவகையில் விஜய்யின் தவெக கட்சியின் மாநாட்டின் போது கூட அஜித் ரசிகர்கள் ’அஜித்தே கடவுளே’ என்று கத்திக்கூச்சலிட்டனர்.
இதனையடுத்து கேரளாவில் கொச்சி வாட்டர் மெட்ரோவில் இருந்த அஜித் ரசிகர்கள், பயணித்தபடி அஜித்தே கடவுளே என்று கூச்சலிட்டு ரசிகர்கள் சென்ற வீடியோ இணையத்தில் தற்போது ட்ரெண்ட்டாகி வருகிறது.
#Ajitheyyy reach ??#VidaaMuyarchi pic.twitter.com/3e1UsMxbon
— Trollywood ? (@TrollywoodX) October 30, 2024