ஆணவத்தில் ஆடிய வைகைப்புயல்!! வடிவேலுவின் உண்மை முகத்தை வெளிச்சம் போட்டு காட்டிய பிரபல நடிகர்..
தமிழ் சினிமாவின் காமெடி லெஜண்ட் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் வடிவேலு, பல ஆண்டுகள் கழித்து ரீஎண்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தந்தையாக மாமன்னன் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். இதனை தொடர்ந்து சந்திரமுகி 2 படத்திலும் நடித்த வடிவேலு, ஆரம்பகாலக்கட்டத்தில் தன்னுடன் நடித்த சக நடிகர்களை கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறார்.
போண்டா மணி
அதிலும் அவருடன் பல காட்சிகளில் நடித்தவர்கள் கூட வடிவேலு தங்களை வளரவிடாமல் தடுத்தவர் என்று விமர்சித்து வந்தனர். சமீபத்தில் கூட உடல்நலக்குறைவால் மரணமடைந்த போண்டா மணி உயிரோடு இருக்கும் போது கூட கண்டுக்கொள்ளவில்லை என்ற விமர்சனம் எழுந்ததை தொடர்ந்து அவரது இறுதி சடங்கிற்கும் வராததை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
காதல் சுகுமார்
இந்நிலையில் சமீபத்தில் காதல் படத்தில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் காதல் சுகுமார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தனக்கு வடிவேலு செய்த மோசமான காரியத்தை பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், வடிவேலுவை சந்திக்க சென்ற போது போண்டாமணி, முத்துக்காளை வெளியில் சென்றதும், என்னை மட்டும் இருக்க சொல்லி பேசினார் வடிவேலு. ஒவ்வொரு கம்பனிக்கு சென்று, என்னை மாதிரி நடிப்பேன் என்று கூறி வருகிறாயா என்று கேட்டார்.
ரம்பா பேச்சை மீறி தமன்னா பின் சென்ற அவரது கணவர்!! குடும்பத்துக்குள் நடந்த குழப்பம்.. தொடையழகி குமுறல்
வாய்ப்பு வந்தது, வேறுவழி இல்லாமல் பண்ணிட்டேன் என்று சொன்னதாகவும், உடனே எதிர்த்து எதிர்த்து பேசிறியா என்று கூறி பின்னாடி இருந்த ஒருவர் என்னை அடித்தார். ஏதோ பண்ண பார்க்கிறார்கள் என்று நினைத்து, இனிமே எதுவும் பண்ணமாட்டேன், ஊரைவிட்டே ஓடுகிறேன் என்று கூறிவிட்டு கிளம்பினேன்.
இப்படி நடிகர் வடிவேலு தன்னிடம் நடந்து கொண்ட விசயத்தை கூறிய காதல் சுகுமாரால் கோலிவுட்டே பரபரப்பாக இருந்து வருகிறது.
மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் இருந்தேன். அப்போது என் மனைவி தான் எனக்கு ஆறுதல் கூறி தைரியம் கொடுத்தார். அதன்பின் விருமாண்டி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து என்னுடைய பொற்காலமாக மாற்றியதாக காதல் சுகுமார் தெரிவித்துள்ளார்.