சக நடிகர் நடிகைகளுடன் இரவு பார்ட்டியில் காஜல்! திருமணத்திற்கு பின் கணவருடனுமா!

flim husband cine
By Jon Jan 21, 2021 05:22 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் அனைத்து முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து குறுகிய காலகட்டத்தில் பிரபலமானவர் நடிகை காஜல் அகர்வால். ஆரம்பகாலத்தில் குடும்ப கதாபாத்திரத்தில் நடித்து குறைவான க்ளாமரை காட்டி வந்த காஜல் பின் ஆடையில் தாராளம் காட்டினால் தான் கோடியில் சம்பளம் என்ற நோக்கத்தினை எடுத்தார்.

இதையடுத்து எப்போது திருமணம் என்ற கேள்விக்கு கொரானா லாக்டவுனை பயன்படுத்து தொழிலதிபர் கெளதம் கிட்சுலுவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு கணவருடன் புது வீட்டில் குடியேறினார் காஜல். பின்னர் மாலத்தீவுகளுக்கு தேனிலவுக்கு சென்றுவிட்டு வந்தார்.

நாடு திரும்பியதும் சிரஞ்சீவியின் ஆச்சார்யா படப்பிடிப்பில் கலந்து கொண்டார். ஹேய் சினாமிகா மற்றும் ஆச்சார்யா ஆகிய படங்களில் நடித்து வரும் காஜல் அகர்வால் திருமணம், ஹனிமூன் என 3 மாதங்களுக்குப்பிறகு மீண்டும் சோசியல் மீடியாவில் ரசிகர்களுடன் அரட்டையடிக்கத் தொடங்கியிருக்கிறார்.

இந்நிலையில், நடிகை காஜல் அகர்வால் சில வருட காலத்திற்கு முன் சக நடிகர்களுடன் இரவு பார்ட்டியில் மது குடிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதேபோல் தன் கணவருடன் எடுத்து கொண்ட மது அருந்தும் புகைப்படங்களும் இணையத்தில் கசிந்து பேசப்பட்டு வருகிறது.  


Gallery