சினிமாவில் இருந்து விலக கணவர் தான் காரணமா? நடிகை காஜல் அகர்வாலுக்கு இப்படியொரு நிலையா!

kollywood kajal aggarwal indian 2 gowtham kicchilu
By Edward May 19, 2021 03:39 PM GMT
Report

தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்து வரும் காஜல் அகர்வால் கடந்த ஆண்டு கெளதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு கணவர் மற்றும் குடும்பத்தினரின் சம்மதத்தின் பெயரில் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஆன் லைன் போர்ட்டலுக்கான தனது உரையாடலின் போது சினிமாவில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார். அந்த உரையாடலில் திருமணத்திற்கு பிறகு ஆரம்பத்தில் ஆதரவு கொடுத்ததால் எளிதாக படங்களில் கவனம் செலுத்த முடிந்தது.

ஆனால், எவ்வளவு காலம் படங்க்ளில் நடிப்பேன் என தெரியாது. கணர் கெளதம் சினிமாவை விட்டு விலகுமாறு கேட்டுக் கொண்டால் நிறுத்தி விடுவேன். அவர் கேட்கும் போது திரைத்துறையை விட்டு விலகிவிடுவதாக கூறியுள்ளார்.

மேலும், கொரோனாவால் கமிட்டான பல படங்களின் படப்பிடிப்புகள் தள்ளிப்போய் வருவதால் தொற்று நிலைமை முடிவுக்கு வந்த பிறகு தனது படங்களின் படப்பிடிப்பைத் தொடங்க காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்து வரும் காஜல் இப்படி கூறியிருப்பது சினிமாத்துறையில் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தொற்றுநோய் சூழ்நிலை காரணமாக இதன் படப்பிடிப்புகள் தாமதமாகும். அதோடு 'இந்தியன் 2' படத்தில் காஜல் அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.