அஜித்துக்காக அட்ஜஸ்ட் செய்த காஜல் அகர்வால்!! காட்டு தீ போல் பரவும் செய்தி
கடந்த 2009ஆம் ஆண்டு ராம் சரண் நடிப்பில் வெளிவந்த மகதீரா படத்தின் மூலமாக பிரபலமானவர் தான் காஜல் அகர்வால். இப்படம் தமிழில் மாவீரன் என்ற தலைப்பில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது, மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்தது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து காஜலின் சினிமா மார்க்கெட் பீகில் சென்றது. தற்போது இவர் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
நடிகர் காஜல் அகர்வால் அஜித்துடன் சேர்ந்து விவேகம் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருந்தார்.
அனுஷ்காவின் கால் சீட் கிடைக்காததால் இப்படத்தின் வாய்ப்பு காஜலுக்கு கிடைத்தது. பெரும்பாலும் நடிகை காஜல் அகர்வால் படப்பிடிப்பு தளங்களில் கேரவனுக்குள் சென்றால் வெளியே வர ரொம்ப நேரம் எடுப்பாராம். ஷாட் ரெடி என்று உதவி இயக்குனர் அழைத்தாலும் காஜல் வர மாட்டாராம்.
ஆனால் அஜித் படத்தில் அப்படி இல்லையாம். குளிர் அடிக்கும் இடங்களில் கூட முதல் ஆளாக கேமரா முன் வந்து நடித்து கொடுத்ததாக ஒரு நாளிதழில் வந்தது இருக்கிறது. தற்போது இந்த செய்து காட்டு தீய போல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.