சமந்தா மாமனாருடன் ரொமான்ஸ்! திருமணத்திற்கு பிறகு கமிட்டான நடிகை காஜல் அகர்வால்!

kajalaggarwal nagaarjun telegumovie
By Jai Aug 28, 2021 03:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் பழனி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை காஜல் அகர்வால். மும்பை மாடலிங் துறையில் இருந்து வந்து பின் இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். இதையடுத்து தமிழில் பொம்மலாட்டம், மோதிவிளையாடு, நான் மகான் அல்ல போன்ற சிறிய பட்ஜெட் படங்களில் நடித்து வந்தார்.

பின் மாற்றான், துப்பாக்கி, ஜில்லா, மெர்சல், விவேகம், மாரி போன்ற முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கொடிக்கட்டி பறந்தார். தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வரும் காஜல் அகர்வால் கடந்த ஆண்டு கெளதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்தார்.

திருமணத்திற்கு பிறகு படங்களில் கமிட்டாகியும் கணவருடன் நேரத்தினை செலவிட்டும் வருகிறார் காஜல் அகர்வால். தற்போது நடிகை சமந்தாவின் மாமனாரும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகருமான அக்கினேனி நாகர்ஜுனாவுடன் நடிகை காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்க இணைந்துள்ளார். திருமணத்திற்கு பிறகு நடிப்பாரா என்ற கேள்விகள் எழுந்தும், கணவர் ஓகே சொன்னால் சினிமாவிற்கு டாட்டா சொல்வேன் என்றும் சமீபத்தில் செய்திகள் வெளியாகியது.

தற்போது தெலுங்கு இயக்குநர் பிரவீன் சட்டாரு இயக்கத்தில் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் துவங்கியுள்ளது. படப்பிடிப்பில் எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

GalleryGallery