கர்ப்பமாகி குழந்தை இருக்கும் நிலையில் இப்படியொரு முடிவில் நடிகை காஜல் அகர்வால்..
இயக்குனர் சங்கர் இயக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன் உலக நாயகன் நடிப்பில் இந்தியன் 2 படப்பிடிப்பு ஆரம்பமானது. முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத்சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் இப்படத்தில் கமிட்டாகினர்.
படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது விபத்து ஏற்பட்ட சில மாதங்கள் தள்ளி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து படம் கொஞ்சம் கொஞ்சமாக டிராப் ரேஞ்சிற்கு பேசப்பட்டது. ஆனால் சங்கர் கண்டிப்பாக படம் இருக்கிறது என்று சில அப்டேட்களை வெளியிட்டு வந்தார்.
இதனைதொடர்ந்து நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதால் படப்பிடிப்பினை தொடர முடியாது என்று படத்தில் இருந்து விலகிவிட்டார் என்றும் செய்திகள் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியது. அப்படியே இந்தியன் 2வை கிடப்பில் போட்டுவிட்டு இயக்குனர் சங்கர் ராம் சரணி ஆர்சி15 படத்தின் வேலைகளை ஆரம்பித்து விட்டார்.
தற்போது கர்ப்பமாகி குழந்தையை பெற்ற காஜல் உடல் எடையை கடுமையாக குறைத்து வருகிறாராம். மேலும் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், நடிகை காஜல் அகர்வால் கோவிட் 19க்கு பிறகு இந்தியன் 2 படம் மீண்டும் செப்டம்பர் 13 ஆம் தேதி படப்பிடிப்பு ஆரம்பிக்கவுள்ளதாக கூறி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.
Finally she said ?
— Kajalian ? (@Ayesha_kajalfan) August 4, 2022
" I am going to resume shooting for INDIAN 2 from 13th September "@MsKajalAggarwal#Indian2
#KajalAggarwal #KamalHassan pic.twitter.com/g0uRWi4Wzk