குழந்தை பிறந்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய காஜலா இது.. கமலுக்காக இப்படியொரு வெறித்தனமா...

Kamal Haasan Kajal Aggarwal Shankar Shanmugam Indian 2
By Edward Sep 25, 2022 09:20 AM GMT
Edward

Edward

Report

தமிழில் நடிகர் பரத் நடிப்பில் 2008 ஆம் ஆண்டு வெளியான படம் பழனி. இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை காஜல் அகர்வால்.

இப்படத்தினை தொடர்ந்து நான் மகான் அல்ல, விஜய்யின் துப்பாக்கி, ஜில்லா, மெர்சல், சூர்யாவின் மாற்றான், அஜித்தின் விவேகம், மாரி, கோமாளி உள்ளிட்ட தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தார்.

குழந்தை பிறந்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய காஜலா இது.. கமலுக்காக இப்படியொரு வெறித்தனமா... | Kajal Aggarwarl Latest Workout For Indian 2Shoot

திருமணம் - கர்ப்பம்

கோடியில் சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகையாக திகழ்ந்து வந்த நடிகை காஜல் அகர்வால் இந்தியன் 2 உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகிய நிலையில் 2019ல் காதலித்து வந்த தொழிலதிபர் கெளதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

கொரானா காரணமாக சிம்பிளாக நடைபெற்ற திருமணத்திற்கு பிறகு ஹனிமூன் என்று பிஸியாக இருந்தார். இதன்பின் கர்ப்பமாகிய நிலையில் கமிட்டாகிய படங்களில் இருந்து விலகி வந்ததாக கூறப்பட்டது.

குழந்தை பிறந்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய காஜலா இது.. கமலுக்காக இப்படியொரு வெறித்தனமா... | Kajal Aggarwarl Latest Workout For Indian 2Shoot

காஜல் - ரிட்டர்ன்ஸ் இந்தியன் 2

ஆனால் தற்போது குழந்தை பிறந்த பிறகு ஆள் அடையாளம் தெரியாமல் மாறி குண்டாகினார். தற்போது கடினமாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்திருக்கிறார்.

இந்நிலையில் மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்ட நிலையில், காஜல் அதற்கான கத்திச்சண்டை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். நடிகர் கமல் ஹாசனுக்காக நடிகை காஜல் அகர்வால் வெறித்தனமாக செய்த செயலின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.